இந்த கலர், இந்த டேஸ்ட், இந்த டெக்ஸ்சர்ல பட்டர் சிக்கன். இப்டிதான் செய்யனும்

பட்டர் சிக்கன் என்றால் பிடிக்காதவங்க ரொம்ப கம்மி. வட இந்திய உணவா இருந்தாலும் வெளிநாட்டவருக்குப் பிடித்த இந்திய உணவுகளில் முதலிடத்தில் இருப்பது பட்டர் சிக்கன்தான். அப்டி பட்டர் சிக்கன் ஏன் பிடிக்கும்னா அதோட ஃபிளேவர்ஃபுல்லான மணமும், கிரீமியான ருசியும் தான். பொதுவா வெளிநாட்டுக் காரங்களுக்கு இந்திய உணவு காரமா இருக்கும்.. ஆனா, பட்டர் சிக்கன் ஒரு ஸ்வீட்னஸ் ஓட இருக்குறதால விரும்பி சாப்பிடுவாங்க.

அவங்கள விடுங்க. நாமலே கொல பசி-ல ரெஸ்டாரன்ட் போய், பட்டர் சிக்கன்-பட்டர் நான் ஆர்டர் பண்ணி காத்திருப்போம். அப்போ, வெயிட்டர் கிட்ட வரைக்கும் கொண்டு வந்துட்டு அப்டியே பக்கத்து டேபிள்-ல சர்வ் பண்ணிட்டு போனா, நமக்கும் அது கிடைக்குற வரைக்கும் நாக்குல எச்சில் ஊறுமே. அதுதான் பட்டர் சிக்கன் ஓட ஸ்பெஷாலிடியே.

சரி பட்டர் சிக்கன் எப்படி இருக்கனும்?

வைப்ரன்ட் ஆன ஆரஞ்ச் கலர்

வெல்வெட் மாதிரி பட்டர் ஸ்மூதான கிரேவி

அதுல மிதந்து வர்ற பட்டர் அண்ட் முந்திரி வாசனை

சர்விங்-காக மேல சுத்தி சுத்தி ஊத்துன கிரீம்

அதுக்கு மேல தூவுனாப்புல கசூரி மேத்தி

இதுதான் ஒரிஜினல் பட்டர் சிக்கனோட உருவம். அதிலும் கொஞ்சம் கிரிஸ்பியா, பட்டர் மினுமினுக்க இருக்குற பட்டர் நானோட வெச்சு சாப்பிட்டா. . . . அய்யோ. . . இப்பவே பசிக்குதேன்னு ஃபீல் பண்றீங்களா? சரி, உடனே போய் ஒரு கிலோ சிக்கன வாங்கிட்டு வந்துட்டு செஞ்சு சாப்பிடுங்க. சிம்பிளான ரெசிபிய த காரிகை-ல பாத்து தெரிஞ்சுக்கோங்க.

தேவையான பொருட்கள்

சிக்கன் ஒரு கிலோ
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
உப்பில்லாத பட்டர் 6 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் ஒன்றரை கப்
கரம் மசாலா 3 டீஸ்பூன்
சீரகம் ஒரு டீஸ்பூன்
இஞ்சி ஒரு டீஸ்பூன்
பூண்டு 3 கொத்து
பட்டை 3 இன்ச்
தக்காளி ஒரு கப்
தண்ணீர் ஒரு கப்
ஹெவி க்ரீம் ஒரு கப்
கசூரி மேத்தி கொஞ்சம்
உப்பு தேவையான அளவு
பெப்பர் தேவையான அளவு

செய்முறை

ஒரு பெரிய பவுலில் நன்கு கழுவிய சிக்கன் ஒரு கிலோவை போட்டு அதில் சால்ட், பெப்பர், ஒரு ஸ்பூன் சில்லி பவுடர், மஞ்சள் தூள் போட்டு கலக்கி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

பட்டரை உருக்கி இரண்டு ஸ்பூன் அளவு ஒரு கடாயில் போட்டு மீடியம் ஹீட்டில் சூடு படுத்தி கொள்ளவும்.

சிக்கனை அந்த வெண்ணையில் போட்டு சற்று பிரவுன் நிறமாகும் வரை கிளறி பொறித்ததுபோல் பிரவுன் நிறத்தில் செய்துகொள்ளவும். 10-15 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து பிரவுன் நிறமாக வரும்வரை பொறிக்கவும்.

மேலும் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் போட்டு உருக்கி, அதில் வெங்காயம், கரம் மசாலா, மீதமுள்ள இன்னொரு ஸ்பூன் சில்லி பவுடர், சீரக பவுடர், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், உப்பு, பெப்பர் உள்ளிட்டவற்றை போட்டு மனம் வரும் வரை சமைக்கவும், அத்துடன் வதக்கிய தக்காளி முந்திரியை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். தக்காளி இல்லாதவர்கள் தக்காளி சாஸை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் ஊற்றி சால்ட், பெப்பர் போட்டு, அரைத்த கிரேவியை ஊற்றி, ஒரு கப் கிரீமை சேர்க்கவும். அது இல்லாதவர்கள் சர்க்கரை கலந்த கெட்டி தயிரை சேர்க்கலாம். சிக்கனை போட்டு கிளறிவிட்டு கெட்டி கொஞ்சம் க்ரீமை மேலே ஊற்றி, கசூரி மேத்தியை கசக்கித் தூவி விட்டு எடுத்தால் பட்டர் சிக்கன் ரெடி.

நெய் சோறு, வெறும் சோறு, சப்பாத்திக்கு ஏற்ற காமினேசன். பரோட்டா, பட்டர்நான் வைத்தும் சாப்பிட்டால் தூள் கிளப்பும். பட்டர் சிக்கன் போன்ற பட்டாசான பல ரெசிபிக்கள் த காரிகையிடம் உள்ளது. அடிக்கடி பகிர்கிறோம். அதுவரை எங்களோட சோசியல் மீடியா பக்கங்களையும் பின் தொடருங்க.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE