சென்னை பொண்ணுங்க எப்போ? எங்க? போனா பாதுகாப்புனு இந்த ஆப் சொல்லும்
என்னதான் நாட்டின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை இருந்தாலும், இன்னும் பெண்களுக்கு அங்கு பாதுகாப்பு குறைபாடு ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது.
அப்படி சென்னைப் பெண்களுக்கான பாதுகாப்புக்கு என சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து என்ஜிஓ நிறுவனம் ஒன்று இணைந்து மை சேஃப்டிபின் என்ற ஆப்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
my safetipin என்ற ஆப் ஆனது ஏற்கெனவே பிற நகரங்களில் உள்ளது. அதேபோல், தற்போது சென்னையிலும் அறிமுகமாகியுள்ளது.
உலக மகளிர் தினமான மார்ச் 8-ஐக் கருத்தில் கொண்டு அன்றைய தினம் இது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
எப்படி இயங்கும்?
இந்த ஆப் ஆனது பாலின ஆய்வின் அடிப்படையில் இயங்கும். எந்த இடத்தில் கூட்டம் அதிகமுள்ளது? அங்கு எத்தனை ஆண்கள்? எத்தனை பெண்கள் உள்ளனர்? எங்கு வெளிச்சம் அதிகமுள்ளது? என ஆய்வு செய்யும்.
இந்த ஆப்-ஐ பதிவிறக்கியுள்ள நபர் ஒரு லோகாலிடியைத் தேர்ந்தெடுத்தால், அந்த இடத்தில் 10 புள்ளிகள் அடங்கிய பாதுகாப்புப் பரிசோதனைகள் நடக்கும். நிகழ்நேர புகைப்படங்களும் எடுக்கப்பட்டு, ஆப் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வுக்குப் பின், பாதுகாப்பு தரவரிசைப் புள்ளிகளின் படி அறிவுறுத்தப்படும்.
அதற்கேற்ப பெண்கள் பயணிக்கும் முன்பு எங்கு பாதுகாப்பு அதிகமுள்ளது? எனத் தெரிந்துகொள்ளலாம். அதற்கேற்ப பயணத்தைத் திட்டமிடலாம்.
My Safetipin கணக்கின்படி, சென்னையின் பாதுகாப்பு தரவரிசை
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் 6.4
கதிட்ரல் ரோடு 8.2
அண்ணா நகர் 8.4
டி நகர் 8.6
அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி 7
அந்தக் காலத்தில் பேருந்தின் இருக்கைகளுக்கு இடையில் கைநீட்டும் ஆண்களைக் குத்திவிட பின்னூசி எனும் சேஃப்டிபின் பயன்படுத்தப்பட்டது. அந்தப் பெயரை வைத்தே இந்த ஆப் உருவாகியுள்ளது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.