குழந்தைகளுக்கு பாலூட்டி வரும் தாய்மார்கள் ஒரு சில உணவுப் பொருட்களை சாப்பிடும்போது, அது பாலின் சுவையும், மணத்தையும் மாற்றுவதாக நம்பப்படுகிறது. நாம் என்ன வகையான உணவுப் பொருட்களை சாப்பிடுகிறோமோ, அதன் சத்து மட்டுமின்றி, சுவையும், வாசனையும் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு செல்கிறது. எனவே ஒரு தாயார் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது குழந்தைக்கு உகந்ததாகும். ஒரு சில உணவுப் பொருட்கள் தாய்ப்பாலின் சுவையை மாற்றும் என நம்பப்படுகிறது.

  • கடல் உணவுகள்

மீன், நண்டு, இறால் போன்ற உணவுப் பொருட்கள் இயற்கையிலையே ஒரு கவுச்சி வாசனை கொண்டவை. இந்த வாசனை தாய்ப்பாலின் சுவையை மாற்றக்கூடும் என நம்பப்படுகிறது. தாய்மார்கள் மீன் சாப்பிட்டபின் அதிகம் பால் ஊறும் எனக் கூறப்படுகிறது. ஒரு சிவ குழந்தைகள் அதனை விரும்பி பருகுவர். ஆனால், ஒரு சில குழந்தைகள் மீன், நண்டு, இறால் போன்றவற்றை சாப்பிட்ட பின் பால் குடிப்பதை விரும்ப மாட்டார்கள்.

வெங்காயம்

வெங்காயத்தின் பச்சை வாசனை ஆனது, பாலின் சுவையை மாற்றக்கூடும். எனவே தாய் வெங்காயம் சாப்பிட்டபின் குழந்தை பால் குடிக்க தயங்கினால், அதனை பச்சையாக சாப்பிடும் பழக்கத்தை தாய்மார்கள் கைவிட வேண்டும்.

இறைச்சி

தாய்மார்கள் தங்களுக்கு விருப்பமான உணவுப் பொருட்களை ரசித்து, ருசித்து உண்ணும் போது பால் ஊறுவது அதிகமாகும். ஈரல், இதயம், தலைக்கறி போன்ற பல்வேறு வகையான உறுப்பு இறைச்சி சார்ந்த உணவுப் பொருட்களை, சாப்பிடும் போது தாய்ப்பாலின் சுவை மாறக்கூடும்.

பூண்டு

வெங்காயத்தைப் போன்றே பூண்டும் பச்சையாக சாப்பிடும் போது ஒரு வித நெடியை ஏற்படுத்தும். தாய்ப்பாலின் சுவையிலும் வாடையிலும் அது மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். பச்சையாகவோ அல்லது அதிகம் பூண்டு கொண்ட உணவுகளை சாப்பிட்ட பின், தங்களது குழந்தை பாலை ருசித்து குடிக்கிறது என்றால் அதை பின் தொடரலாம். ஆனால், பூண்டு சாப்பிட்ட பின் குழந்தை பால் குடிக்க மறுக்கிறது என்றால் அதனை உணவில் சேர்த்துக் கொள்ள சற்றே யோசிக்கலாம்.

சோயா சாஸ்

அதிக வாசனை கொண்ட உணவுப் பொருட்களில் ஒன்று சோயா சாஸ். இதனை உணவில் சேர்த்துக் கொள்ளும் தாய்மார்களுக்கு, தாய்ப்பாலின் வாடையில் மாற்றம் ஏற்படும் என்பதை பலரும் அறிந்திட வாய்ப்பில்லை. எனவே சோயா சாஸ் சாப்பிட்ட பின் குழந்தை பால் குடிக்க மறுத்தால், இனி அந்த உணவை தவிர்த்து விட வேண்டும்.

அதிக காரமான மசாலா

கிராம்பு, பட்டை, ஏலக்காய், காரம் மிக்க உணவு பொருட்கள் அல்லது மசாலா பொருட்கள் கலந்த உணவு தாய்ப்பாலின் சுவையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பாலூட்டும் தாய்மார்கள் அதிக காரம் இல்லாத உணவு பொருட்களை தேர்வு செய்யலாம்.

இதையும் படிங்க. . . . தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு என்னென்ன பலன் தெரியுமா? – The Karigai

You may have missed

Facebook
Instagram
YOUTUBE