தாய்மை என்றால் புனிதமானது தான். ஆனால் குழந்தையை பெற்றெடுக்கவும் வளர்த்தெடுக்கவும் ஒரு தாய் சொல்ல முடியாத அளவுக்கு துயரங்களை எதிர்கொள்கிறாள். அப்படி மனித பிறவிகள் மட்டுமின்றி சில உயிரினங்களும் கடுமையான அதேசமயம் வித்யாசமான சில சவால்களை எதிர்கொள்கின்றன. அவற்றில் எந்தெந்த உயிரினங்கள் அதிக சவால்களை எதிர்கொள்கின்றன? என்பதை “த காரிகை”யின் சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்.

ராட்சத பசிபிக் ஆக்டோபஸ்

ராட்சத பசிபிக் ஆக்டோபஸ் என்பது அதிகம் உழைக்கும் அல்லது மிகவும் சிரமப்படும் உயிரினங்களில் ஒன்று. குறிப்பாக பிரசவத்தின் போது. ஒரு ராட்சத பசிபிக் ஆக்டோபஸ் ஆனது 74,000 முட்டைகளை இடும். அதுவும் மிக ஆழத்தில் ஏதேனும் ஒரு கூடாரம் போன்ற ஒரு இடத்திலோ, அல்லது குகை போன்ற இடத்திலோ மிகவும் வலியை தாங்கிக் கொண்டு அது முட்டை இடும். அதுமட்டுமின்றி வேறு எங்கும் உணவுக்கு கூட நகராமல் 7 மாதங்கள் தொடர்ந்து அங்கேயே இருந்து காவல் காக்கும்.

ஆப்பிரிக்க யானை

யானைகள் என்றாலே அதிக காலம் கருவை சுமக்கும். ஆனால் ஆப்பிரிக்க யானை இனங்கள் கிட்டதட்ட 2 ஆண்டுகள் கருவை சுமக்கிறது. 200 பவுண்டு எடையில் உள்ள ஒரு யானை குட்டியை ஈனுகிறது. அதுவும் உலகிலேயே அதிக எடை கொண்ட நிலத்தில் வாழும் உயிரினமான இது பிரசவத்தின் போது அதிகம் சிரமப்படும் உயிரினங்களில் இணைகிறது.

கிரே நிற கங்காரு

யானை 2 ஆண்டுகள் குட்டியை கருவில் சுமக்கிறது என்றால் சாம்பல் நிற கங்காருவானது வெறும் 36 நாட்களே குட்டியை கருவில் சுமக்கும். அதன் பின் தனது பவுச் போன்ற முன்னம் பையில் அது கருவை வைத்துக்கொண்டு பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்க்கும். 9 மாதங்கள் ஆன பிறகு தான் அது வெளியே விடும். அதுவரை தாயின் முன்பக்கத்தில் உள்ள ஒரு பேக் போன்ற அமைப்பில் கங்காரு தனது குட்டியை சுமக்கும்.

விர்ஜினியா ஒப்பசம்

விர்ஜீனியா ஒப்பசம் என்ற ஒரு வகை உயிரினம் ஒரே நேரத்தில் 25 குட்டிகளை ஈனும். அதில் பெண் ஒப்பபசம்களுக்கு 13 பால் சுரக்கும் காம்புகள் இருக்கும். ஒவ்வொரு முறையும் 12 குட்டிகளுக்கு அது பால் கொடுக்கும். ஒரு நேரத்தில் ஒரு காம்பில் மட்டுமே பால் சுரக்கும் என்பதால் 25 குட்டிகளில் 13 குட்டிகள் மட்டுமே உயிர் பிழைக்கும்.

ராஜ பென்குயின்

ராஜ பென்குயின் பிரசவமே சற்று வித்தியாசமானது. இது தாயும் தந்தையும் சேர்த்து உள்ளடக்கிய பொறுப்பைக் கொண்டது. முட்டையிட்டதும் பெண் பென்குயின் ஆனது உணவை தேடி சென்றுவிடும். அதற்காக அந்த முட்டைகளை தந்தை பெண் குயினிடம் மாற்றிவிடும். அந்த முட்டை உடையாமல் மிக மிக கவனமாக பாதுகாத்து குஞ்சை பொரிதெடுக்க வேண்டிய பணி ஆண் பென்குயின் உடையது.

ஸ்ட்ராபெரி நிற விஷமுள்ள தவளை

எம்பரர் பென்குயின் ஆனது முட்டையை விட்டு மிக தூரத்தில் சென்று விடும். ஆனால் ஸ்ட்ராபெரி நிற விஷமிக்க தவளைகள் மிக அதிக உயரமுள்ள உச்சிக்கு மலை ஏறிச் சென்று குஞ்சுகளை பாதுகாக்கும். முதலில் கோஸ்டா ரிக்காவில் மழை காடுகளில் தரையில் முட்டையிடும். அதன் பின் முட்டைகள் பொரிந்ததும் அதன் குட்டி குட்டி தவளைகளை குஞ்சுகளை ஒன்றன்பின் ஒன்றாக தூக்கிச் செல்லும். குட்டி குட்டி நீர் குளங்களுக்கு எடுத்துச் சென்று வளர்க்கும். குட்டிகளை பாதுகாப்பதற்காக இது ஒரு விஷமுள்ள திரவத்தை சுரக்கும்.

ஆர்கா

ஆர்கா என்ற மீன் வகையும் வித்யாசமான தியாகத்தை செய்யும். குட்டிகளை ஈன்றதும் முதல் ஒரு மாதத்திற்கு தாய் தூங்காது பாதுகாக்கும். தூங்காது ஒரு நிமிடம் கூட அது தூங்காமலும், சற்றும் ஓய்வெடுக்காமலும் ஒரு மாதம் தொடர்ந்து தனது குட்டிகளை பாதுகாக்கும் சக்தி கொண்டது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE