தமிழ்நாட்டில் இவ்வளவு தீம் பார்க்கா?

கோடை விடுமுறை விட்டாலே நாளொன்றுக்கு சுமார் 2 மணி நேரம் ஆவது தண்ணீரில்தான் குழந்தைகள் செலவிடுவர். அதுவும் மழலைப்பட்டாளம் ஒன்று சேர்ந்துவிட்டார் எத்தனை லாரி தண்ணீர் வாங்கி ஊற்றினாலும் பத்தாது.

குழந்தைகளையும் சொல்லி தவறில்லை. அவர்களது உடல் அதிக வெப்ப அலையை தாக்குப் பிடிக்க முடியாமல் தன்னிச்சையாக தண்ணீரை தேடி ஓடுகிறது. அதில் குறும்புத்தனமும் சேர்ந்து கொண்டால் எப்படி இருக்கும்? கண்டிப்பாக நீர் வீண் தான். ஆனால் அப்படி நீரை வீணடிப்பதற்கு என்று ஒரு அனுமதியோடு கொண்டாடி குதூகளிக்க ஒரு இடம் இருக்கிறது என்றால் அது வாட்டர் தீம் பார்க் தான்.

ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் ஒரு முறையேனும் அவர்களை இது போன்ற தீம் பார்க்-களுக்கு அழைத்துச் சென்றால் குளுமையாக பொழுதை கழிப்பர். அத்துடன் “இந்த விடுமுறைக்கு எங்கேயுமே கூட்டிட்டு போகவில்லையே”, அப்படின்னு வர கம்பிளைன்ட்டும் குறையும். காலம் முழுக்க தீம் பார்க் பயணங்கள் நினைவில் அழியாமல் இருக்கும்.

அவ்வாறு தமிழகத்தில் உள்ள தீம் பார்க்-களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்

தமிழ்நாட்டின் முதல் மற்றும் ஒரே உள்ளரங்க பனி தீம் பார்க். இது விஜிபி யூனிவர்சல் கிங்டமின் மற்றொரு பொழுதுபோக்கு தளம். 44 ஏக்கர் பரப்பளவில் பணி விரிந்து படர்ந்து கிடக்கிறது. அதிகம் செலவு செய்து குலுமினாலி, ஹிமாலயாஸ் செல்ல விரும்புவோர் மிகக் குறைந்த செலவில் பனியில் விளையாடி மகிழலாம். இங்கு காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை ஐஸ் ஸ்கேட்டிங், ஸ்நோபோலிங், பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடலாம். பெரியவர்களுக்கு 650 ரூபாயும் குழந்தைகளுக்கு 550 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோவை மக்களுக்கு இருக்கும் நீர் விளையாட்டு பொழுதுபோக்கில் முதன்மையாக உள்ளது கோவை பிளாக் தண்டர். 50 வகையான நீர் விளையாட்டுகள், சர்ஃபிங், பறவை பூங்கா, அக்வாரியம், ஹாட் ஏர் பலூன், 5 D தியேட்டர், ஹாரர் ஹவுஸ், வீடியோ கேம்ஸ், அனிமல் வாட்ச் டவர் உள்ளிட்டவை உள்ளது. காலை 9 முதல் மாலை 6 மணி வரை பெரியவர்களுக்கு 840 ரூபாயும் குழந்தைகளுக்கு 750 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னை பூந்தமல்லியில் உள்ளது குயின்ஸ் லேண்ட் பூங்கா 51 நீர் விளையாட்டுகள் உள்ளன. இது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரிய பிரிஃபால் கோபுரத்தை கொண்டுள்ளது. திங்கள் தவிர மற்ற நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை குயின்ஸ் லேண்ட் திறந்திருக்கும். பெரியவர்களுக்கு 550 குழந்தைகளுக்கு 450 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோவை சிறுவாணி மெயின் ரோட்டில் உள்ளது கோவை கொண்டாட்டம் குறிப்பாக பேரூர் கோவையில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. குளிர்ச்சியும், திரில்லும் இங்கு சேர்ந்து இருக்கும். இதற்கு பெரியவர்களுக்கு 600 ரூபாயும் குழந்தைகளுக்கு 550 ரூபாயும் கட்டண வசூலிக்கப்படுகிறது

உதகைக்கு பலமுறை சென்றவர்கள் கூட இங்கு சென்றிருக்க மாட்டார்கள் இது ஜுராசிக் ஜங்கிள் என அழைக்கப்படுகிறது. டைனோசர் உருவங்கள், அதன் எலும்புக்கூடுகள், முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் டைனோசரின் உருவங்கள் உள்ளிட்டவை இங்கு இடம் பெற்றிருக்கும். 5டி தியேட்டர், ஹான்டட் ஹவுஸ் எனும் பேய் மாளிகை உள்ளிட்டவை உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். 300 முதல் 1000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மதுரை திண்டுக்கல் சாலையில் இருக்கும் அதிசயம் அம்யூஸ்மென்ட் பார்க்கில் 55 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழும் செயற்கை அருவி உள்ளது. இங்கு, காலை 10. 30 முதல் மாலை 5 .30 வரை திறந்திருக்கும் இங்கே நுழைவு கட்டணம், பெரியவர்களுக்கு 800 குழந்தைகளுக்கு 500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE