சமந்தாவை ஜெயில்ல போட சொன்ன டாக்டர்

நடிகை சமந்தா மையோசைட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து தனது மருத்துவ சிகிச்சைகள் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

மருத்துவத்தை பற்றியும், அவர் எடுத்து வரும் சிகிச்சை குறித்தும் சமந்தா பேசி வருகிறார்.

அந்த வகையில நெபுலைசர் வைத்து (h2o2)ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்தி அதை சுவாசிக்கும் போது தனக்கான வலி குறைவதாக அவர் கூறியிருந்தார்.

நீங்களும் இதை முயற்சிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இந்த மருத்துவத்தை தனக்கு பரிந்துரைத்த மருத்துவரையும் இன்ஸ்டாகிராமில் டாக் செய்திருந்தார்.

இது பற்றி த லிவர் டாக்டர் என இன்ஸ்டாகிராம் ஹேண்டில் வைத்திருக்கும் கல்லீரல் மருத்துவர் ஒருவர், h2o2 நெபுலைசரில் போட்டு பயன்படுத்துவது மிகவும் தவறானது இது கொரோனாவிற்கு எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்க ஆஸ்துமா சொசைட்டி எச்சரித்து இருந்த பதிவை சுட்டிக்காட்டி பேசி இருந்தார்.

ஹைட்ரஜன் பெராக்ஸைட் என்பது சர்ஜரியின் போது பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்து கழுவ பயன்படுத்தும் திரவம் ஆகும்.

மருத்துவம் படிக்காத சமந்தா இதனை ஒரு மருத்துவரைப் போல அனைவருக்கும் பரிந்துரைத்தது மிகவும் தவறான, இதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும், தவறான மருத்துவத்தை பரிந்துரைத்த மருத்துவம் படிக்காத சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும் என்று பேசி இருந்தார்.

இது பற்றி நடிகை சமந்தாவும் நீண்ட நெடிய விளக்கத்தை கொடுத்து இருந்தார். “கடந்த சில ஆண்டுகளாக நான் மருந்துகளை உட்கொண்டு வருகிறேன் எனக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்தையும் நான் முயற்சித்தேன். இந்த பரிந்துரைகள் மிகவும் தகுதி வாய்ந்த நிபுணர்களிடம் இருந்து வந்தவை. என்னை போன்ற ஒருவருக்கு முடிந்தவரை தனிப்பட்ட ஆராய்ச்சி செய்த பிறகு இந்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றது. வழக்கமான மருத்துவ முறை மிகவும் விலை உயர்ந்தவை. நான் அவற்றை வாங்குவதற்கு எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று நினைக்கும் வேளையில் முடியாதவர்கள் பற்றியும் நான் அடிக்கடி நினைத்து பார்த்து இருக்கிறேன். நீண்ட காலமாக வழக்கமான சிகிச்சைகள் என்னை குணப்படுத்தவில்லை. அந்த நிலையில் எனக்காக கிடைத்த இந்த மாற்று மருத்துவ முறை, மற்றவர்களுக்கும் சிகிச்சை பயனளித்து இருக்கலாம்.

“பல சுய பயன்பாட்டு சோதனைகளுக்கு பிறகு பிரமாதமாக வேலை செய்யும் சிகிச்சைகளும் கண்டறிந்ததால், மற்றவர்களுக்கு பயனளிக்க முடிந்தால் பயனளிக்கட்டுமே என்றுதான் கூறினேன். கல்வி பயின்ற போதிலும் இவர் மாற்று சிகிச்சையை பரிந்துரை என்று ஒரு மருத்துவரை டாக் செய்து குறிப்பிட்டிருக்கிறேன. ஆனால் அந்த மருத்துவரிடம் அது சம்பந்தப்பட்ட அறிவு அதிகம் இருப்பவரிடம் இது பற்றி விவாதிக்காமல், கடுமையாக வார்த்தைகள் பயன்படுத்தி என்னை சிறையில் போட வேண்டும் என்று ஜென்டில்மேன் மருத்துவர் ஒருவர் கூறியிருக்கிறார். ஒரு சினிமா பிரபலமாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மையில் எனக்கு பரிந்துரைத்த மருத்துவரிடம் இது பற்றி அறிவுப்பூர்வமாக விவாதித்து இருந்தால் நான் அதை வரவேற்று இருப்பேன். ஆனால் அந்தப் பரிந்துரையை பிறருக்கு தெரிவித்த என்னிடம் வந்து விவாதிப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்டிருந்தார் சமந்தா.

தன்னுடைய வாழ்க்கையில தான் பட்ட அனுபவத்தை சமந்தா பதிவிட்டு இருக்கிறார். அதனால வந்து எந்த தப்பும் இல்லை என்று ரசிகர்களும் பிரபலங்களும் ஆதரவாக தற்போது இணையதளத்தில் பேசு பொருளாக்கினர்.

Facebook
Instagram
YOUTUBE