சுருங்குகிறதா திருவாரூர் ஆழித்தேர்! பேராபத்து அபாயம்!

தமிழகத்தின் பல ஆலயங்களில் தேர்கள் இருந்தாலும் ஆழித்தேரானது, மிக மிக சிறப்பு வாய்ந்தது. பிற தேர்களை விட திருவாரூர் தேரை மட்டுமே ஆழித்தேர் என அழைக்கின்றனர். இதில் பல்வேறு ரகசியங்களும், வரலாறும் புதைந்துள்ளன. ஆழித்தேரின் மகத்துவத்தை சீரழிக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறையும், கோவில் நிர்வாகமும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Thiruvarur Aazhi Chariot

அப்படி என்ன ஸ்பெஷல்?

திருவாரூர் ஆழித்தேரானது உலகப் பிரசித்தி பெற்றது. இந்த தேர் உலக அளவில் பிரம்மாண்டத்துக்கு பெயர் போனது. ஆழித்தேரின் மர பீட வடிவம் 500க்கும் மேற்பட்ட கலைநயமிக்க சிற்பங்களைக் கொண்டது. அந்தக் காலத்திலேயே 8 கோண வடிவில் குறுக்கு வெட்டு தோற்றத்தில் உருவாக்கப்பட்டது. இந்த தேரின் வடிவமைப்பு 20 பட்டைகளாக உள்ளது.

வியக்கும் கலைவண்ணம்

உலகளாவிய பொறியியல் தொழில்நுட்ப கலைஞர்களும், நிபுணர்களும் ஆழித் தேரின் பிரம்மாண்டம் கண்டு, அதிசயிக்கின்றனர். அவர்கள், ஆய்வுக்கு உட்படுத்தும் ஒரு கட்டுமான இலக்கணமாக புகழ்பெற்று வருகிறது.

வரலாற்றில் ஆழித்தேர்

இத்தகைய பெருமைமிகு ஆழித் தேரானது, அசைந்து வரும் அழகை கண்டு பக்தர்கள் மனம் உருக வழிபடுவர். இந்த அழகை பற்றி தேவாரங்களிலும், பெரிய புராணத்திலும், கல்வெட்டுக்களிலும் ஏராளமான வர்ணனைகளுடன் எழுதப்பட்டுள்ளன. சங்க கால தமிழ் வரலாற்றில் ஆழித்தேர் இன்றியமையாததாக இருந்து வருகிறது.

தேரின் உருவம்

ஆழித்தேர் ஆனது 96 அடி உயரம் கொண்டது. இதன் எடை மட்டும் 450 டன் ஆகும். இத்தகைய பிரம்மாண்ட வடிவம் கொண்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பதையே புனிதமாக கருதுகின்றனர்.

தேரின் சாரதி யார் தெரியுமா?

தேரின் முன்பக்கம் உள்ள 4 குதிரைகள் ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகிய 4 வேதங்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தேரை ஓட்டும் சாரதியாக பிரம்மா அமர்ந்து இயக்குகிறார். ஆலயத்தின் பிரதான 4 ராஜ வீதிகளிலும் பிரம்மா இந்த பிரம்மாண்டத் தேரை ஓட்டுவது போன்ற ஐதீகத்தின்படி, தேரோட்டம் காட்சிப்படுத்தப்படுகிறது. பிரம்மதேவன் தேரை கம்பீரமாக இயக்க, அழகிய ஆழித்தேர் உருண்டு வருவது கண்டு வழிபாடு நடத்த பெரும் பாக்கியம் படைத்திருக்க வேண்டும் என பக்தர்களால் கருதப்படுகிறது.

ஆழித்தேருக்கு அபாயம்

எப்போதுமே உலகப் பெருமை மிக்க இத்தேரின் உருவம் பேசு பொருளாக இருந்து கொண்டே தான் வருகிறது. இன்று வரை ஆச்சரியமூட்டும் அத்தகைய தொழில்நுட்பமும் கலைநட்பமும் தற்போது சிதைவுக்கு உட்படுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுருங்குகிறதா ஆழித்தேர்

பக்தர்களாலும் வரலாற்று ஆர்வலர்கள் ஆளும் பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் ஆழுத்தேரின் மகத்துவம் அறியாமல் ஒரு குற்றம் நடக்கிறது. தேரின் உயரத்தையும், அகலத்தையும் அனாயசமாக ஆண்டுதோறும் குறைத்து வருகின்றனர் கோவில் நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறைடும்.

எதற்காக சிதைப்பு?

தேரோடும், 4 ராஜ வீதிகள் தற்போது நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 4 ராஜ வீதிகளிலும் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க ஆண்டுதோறும் தேரின் உயரம் அகலம் குறைக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஆண்டு பல அடிகள் தேரின் சக்கர உயரமும் அகலமும் குறைக்கப்பட்டால் தேரின் எடையான 450 டன், சிறிய சக்கரங்களுக்கு தாக்குப் பிடிக்காமல் விழ வாய்ப்புள்ளது.

பக்தர்களுக்கும் பேராபத்து

இதனால் தேருக்கு மட்டுமின்றி, அதனை வடம் பிடித்து இழுத்து வரும் பக்தர்களுக்கும் பேராபத்து அபாயம் உள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற இத்தகைய பெருமைமிகு திருவாரூர் உயரம் ஆண்டுக்கு ஆண்டு குறைவதை பொறுக்காத திருவாரூர் ஆழித்தேர் பக்தர்கள் பேரமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீதிமன்றம் தலையிட வேண்டும்

நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்திடவும் கோரிக்கை விடுத்துள்ளனர் பக்தர்கள். ஆழி என்ற அடைமொழியை பாதுகாத்திட அந்த பக்தர்கள் பேரமைப்பு இரு கரம் கூப்பி வணங்கி நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

Facebook
Instagram
YOUTUBE