விரக்தியின் மேகம் களைகிறது! – பில்கிஸ் பானுவும்! மிரட்டலை மீறி உதவிய 3 பெண்களும். . !

பில்கிஸ் பானு என்ற பெண் பல ஆண்களால் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார. அன்றைய தினமே அவரது 3 வயது பெண் குழந்தை தரையில் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது. இதற்கு அவர் இஸ்லாமியர் என்பதே காரணமாக அமைந்தது வேதனை.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் சிறை தண்டனை பெற்றனர். ஆனால் குஜராத் அரசோ அவர்களை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்தது.

இந்த சம்பவத்தில் பில்கிஸ் பானு என்ற நிலை குலைந்து போன பெண்ணுக்கு உதவியாக 3 பெண்கள், இந்துத்துவாவாதிகள், அரசியல்வாதிகளின் கடுமையான எதிர்ப்புகளையும், மிரட்டல்களையும் மீறி துணை நின்று நீதியை நிலைநாட்டி உள்ளனர். அந்த துணிச்சலான காரிகைகளை பெருமைப்படுத்துகிறது “த காரிகை”.

ரேவதி லால்

இவர் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் பத்திரிகையாளராக பணியாற்றிய பெண். பில்கிஸ் பானு செய்தியாளர்களை சந்தித்தபோது பத்திரிக்கையாளர்களில் ஒரு பெண் பத்திரிகையாளராக நின்ற அவருக்கு நடந்த கொடூரங்களை காதில் கேட்டதும் வெட வெடத்து போனது.

மிகவும் மனமுடைந்து போனார். ஒரு பெண்ணுக்கு இப்படி கூட கொடூரங்கள் நடக்குமா? என அவர் மிகவும் மன வேதனை அடைந்தார்.

ஆனால் வழக்கமாக மக்கள் எல்லோரும் செய்வது போல் வெறும் ”உச்”சுக்கொட்டி விட்டு அவர் அந்த சம்பவத்தை கடந்து விடவில்லை.

மாறாக களத்தில் இறங்கி பில்கிஸ் பானு சட்டரீதியாக போராட உதவினார்.

இது பற்றி ரேவதிலால் கூறும் போது “பில்கிஸ் பானுவை தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை. அப்படி சந்தித்து இருந்தால் அது அவருடைய துன்பத்தை அதிகரித்திருக்கும் என்று நான் நினைத்தேன். எனவே அதனை நான் விரும்பவில்லை. அவருக்கு நடந்த கொடுமையில் பில்கிஸ் பானு கடைபிடித்த பொறுமையானது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. ஒரு நாள் மாலை சக பத்திரிகையாளர்களிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. பில்கிஸ் பானு வழக்கில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்கிறீர்களா என ஒரு பத்திரிக்கையாளர் என்னிடம் கேள்வி கேட்டார். இது ஏன் எனக்கு முன்கூட்டியே தோணவில்லை? என நான் உடனடியாக சம்மதித்தேன்.”

முன்னாள் பெண் பத்திரிக்கையாளரான ரேவதி லால் தற்போது சர்பரோஷி அறக்கட்டளை மூலம் தன்னார்வள அமைப்பை நடத்தி வருகிறார். இந்த முயற்சியின் வெற்றி சுபாஷினி அலியையே சேரும் என்று சமர்ப்பிக்கிறார் ரேவதி லால்.

சுபாஷினி அலி

சுபாஷினி அலி ஒரு முன்னாள் எம்பி. அது மட்டும் இன்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் கூட. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி அவர் பேசும்போது “பிரதமர் ஒருபுறம் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து பெண்களின் பாதுகாப்பு பற்றி உரை நிகழ்த்தி கொண்டு இருந்தார். ஆனால் மறுபுறம் பில்கிஸ் பானுவுக்கு கொடுமை விளைவித்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு மாலை மரியாதையோடு வரவேற்கப்பட்டதையும் பார்த்தோம்” என்றார்.

இதை அடுத்து ‘இதுதான் நீதியின் முடிவா?’ என பில்கிஸ் கேள்வி கேட்டது என்னுள் ஒரு மின்னல் தாக்கியது போன்று உணரப்பட்டது” என்றார்.

2002ல் பில்கிஸ் பானுவுக்கு அந்த கொடூரம் நிகழ்ந்த 2 நாட்களுக்கு பின்பு தான் நான் அவரை சந்தித்தேன். மிக நீண்ட காலத்துக்குப் பின்பு அரசுக்கு எதிராக இது போன்ற ஒரு தீர்ப்பு வந்துள்ளது. எனவே இதில் நீதிபதிகளின் துணிச்சலை நான் மிகவும் பாராட்டுகிறேன்” என்றார் சுபாஷினி.

“இவ்வளவு நீண்ட போராட்டத்தை யாரால் நடத்த முடியும்? எத்தனை பேரால் உச்ச நீதிமன்றத்திற்கு போக முடியும்? என்பதை யோசிக்க வேண்டும். எனவே பெண்கள் தைரியமாக இருங்கள். உங்களுக்காக பல அமைப்புகள் உள்ளன.” என தைரியமூட்டினார்.

ரூப்ரேகா வர்மா

லக்னோ பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் பேராசிரியராக இருந்தவர் ரூப்ரேகா வர்மா. இவர் நடத்திய சட்டப் போராட்டம் பற்றி பின்வருமாறு கூறினார்.

“11 குற்றவாளிகள் விடுதலையான போது மிகவும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தேன். சில நாட்கள் கழித்து இதைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும் என்று விவாதித்தோம். அதற்காக டெல்லியில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பேசினோம். வழக்கு என்ற சட்டப் போராட்டம் நீடிப்பதால் ஒரு சிலரின் பெயர்களை எங்களால் குறிப்பிட முடியவில்லை. ஆனால் கபில் சிபல், விருந்தா கிரோவர், இந்திரா ஜெய்சிங் என பல சகாக்களும் எங்களுடன் துணை நின்றனர்.”

பொதுநல வழக்காக தொடர்வது என விவாதிக்கப்பட்டபோது மனுவில் எங்கள் பெயரை சேர்க்குமாறு கூறினோம். இதை அடுத்து சுபாஷினி அலி, ரேவதி லால், ரூப்ரேகா வர்மாவின் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிமன்றத்தின் தீர்ப்பு குற்றவாளிகளுக்கு அவப் பெயரை ஏற்படுத்தியது மட்டுமின்றி சிறந்த பாடத்தையும் கற்றுக் கொடுத்துள்ளது. அவர்கள் பொய் சொல்லித்தான் விடுதலையாகியுள்ளனர். நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு மேலும் நம்பிக்கை உள்ளது. ” என்றார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE