பலரும் பொதுவெளியில் சிரிக்கவே மாட்டார்கள். இதற்கு காரணம், அவர்களுக்கு சிரிக்கத் தெரியாது என்பதற்காக அல்ல. ஒருவேளை அவர்களது பற்களில் மஞ்சள் கறை அதிகம் இருக்கலாம். இதனை போக்க வீட்டிலேயே என்னென்ன செய்யலாம்? என்பதை விளக்குகிறது த காரிகையின் கட்டுரை

பளீச் என பல்கலைக் கொண்டவர்கள் கான்ஃபிடன்டாக பொது வெளியில் சிரிப்பார்கள். ஆனால் கறையுள்ள பற்களைக் கொண்டவர்கள் கூட பின்வரும் டிப்ஸ்களை பின்பற்றினால், மஞ்சள் கறையை நீக்கலாம்.

எதனால் கறை?

பற்களை சரியாக விளக்காவிட்டாலும் சாப்பிட்ட பொருட்கள் பற்களில் தேங்குவதாலும் மஞ்சள் அல்லது பழுப்பு நிற கறைகள் ஏற்படும்.

கறைகளை நீக்காவிட்டால் என்ன ஆகும்?

பாக்டீரியாக்கள் உற்பத்தி அதிகரித்து பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகரித்து விடும். எனவே பற்களில் மஞ்சள் கறை படிய துவங்கும் போதே இதனை வீட்டு மருவத்துவத்திலேயே சரி செய்ய வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா உப்பு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து டூத் பிரஷில் பேஸ்ட் போல எடுத்து பற்களை தேய்த்து வர அது வெந்நிறமாகும்.

ஹைட்ரஜன் பெராக்சைடு

தண்ணீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் கலந்து சிறிது சிறிதாக வாயில் ஊற்றி சில வினாடிகள் வாயில் வைத்திருந்து வாயை கொப்பளித்து வர வேண்டும். பின் சாதாரண நீரில் ஒரு முறை வாயை கொப்பளிக்க கரைகள் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும்.

பூண்டு

இரண்டு பல் நசுக்கிய பூண்டு, தக்காளிச்சாறு, ஒரு ஸ்பூன் சோடா உப்பு ஒரு துளி இவைகளுடன் வழக்கமான பல் தேய்க்கும் பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து தினமும் பிரஷ் செய்து வர மஞ்சள் கறைகள் நீங்கும்

ஆரஞ்சு பழத்தோல்

ஸ்ட்ராபெரி பழத்தை மசித்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து இரண்டையும் சேர்த்து பல தேய்க்கலாம். அதே போல ஆரஞ்சு பழ தோலை பற்களில் கரை உள்ள இடங்களில் சில நிமிடங்கள் வைத்து தேய்த்தாலும் கரைகள் மெல்ல மறையும் என்று கூறப்படுகிறது.

கொய்யா இலை

கற்றாழை ஜெல், கிளிசரின், பேக்கிங் சோடா, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவை தொட்டு தேய்த்து வர கறை படியாது. தினமும் மிளகு மென்று சாப்பிட்டாலும், 2 கொய்யா இலைகளை எடுத்து சுத்தம் செய்து அதை மென்று துப்பினாலுமே பற்கள் பளிச்சென இருக்கும்.

பல் கூச்சம்

அழுத்தியும் வேகமாகவும் பற்களை தேய்த்து வர அதன் எனாமல் தேய்ந்து ஈறுகளில் பல் கூச்சம் வர வாய்ப்பு உண்டு. எனவே சுத்தமாகவும் அழகாகவும் பிரஷ் செய்ய வேண்டும். வைட்டமின் குறைபாடு இருந்தாலும் பல் கூச்சம் வரும்.

தேங்காய் எண்ணெய்

ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வாயில் வைத்திருந்து எண்ணெயை கொப்பளித்து வந்தாலே பல் கூச்சம் குறையும் பற்களின் கறையும் நீங்கும்.

வாய் துர்நாற்றம்

கிராம்பு எண்ணையை வாயில் தேய்த்தால் துர்நாற்றம் நீங்கும். ஆனால் இவை அனைத்தும் தற்காலிக தீர்வே தவிர நிரந்தர தீர்வுக்கு மருத்துவரையே அணுக வேண்டும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE