“எனக்கு அப்புறம் என் மகன பத்திரமா பாத்துக்கோங்க. அரசியல் மட்டும் வேண்டாம்” லாரன்ஸ் அம்மா கண்ணீர்!
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் திரையில் உலகிலேயே தாராள மனம் கொண்ட நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்தவர் என்பது மட்டும் தான் நம்மில் பலருக்கு தெரியும்.
ஆனால் அவர் மழைக்கு கூட ஒழுகும் ஓலை வீட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பதை அவரது தாய் தற்போது பகிர்ந்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ராகவா லாரன்ஸின் தாய் கண்ணீர் மல்க பேசி உள்ளார்.
“என் மகன் ஏழ்மையில் பிறந்தவன். நாங்கள் ஓலை வீட்டில் தான் இருந்தோம். மழை பெய்தால் நீர்க்கசியும் வீடு தான் அது. அத்தகைய ஏழ்மையில் பிறந்த அவன் தற்போதும் மிக எளியவனாக வலம் வருகிறான்.
எந்த இடத்திற்கு சென்றாலும் அவன் தன்னை எளிமையாகவே காட்டிக் கொள்கிறான். இதற்கு அவன் பிறந்து வளர்ந்த விதம் தான் காரணம்.” என்றார்.
“ஒரு வேளை நான் இறந்தால் கூட, என் மகனை பத்திரமாக பார்த்துக் கொள்ள இங்கு ஏராளமான தாய்மார்கள் அவனுக்கு உள்ளார்கள்.”
“அவன் நிறைய ஏழை மக்களுக்கு நன்மை செய்துள்ளார். இதனாலேயே அவன் பல வீடுகளில் மகன் போல் வாழ்கிறான். என் மகனை மகனைப் போல் பார்த்துக் கொள்ள இத்தனை பேர் இருக்கிறார்கள் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது” என்று கண்கலங்க பேசினார்.
“அவன் சம்பாதிக்கும் பணத்தில் அவன் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் நன்மை செய்யட்டும். ஆனால், அரசியலுக்கு மட்டும் வர வேண்டாம் என்று நான் அவனிடம் கூறியுள்ளேன்” என்றார்.
தாய் கண் கலங்குவதை பார்த்த ராகவா லாரன்ஸ் “நான் எங்கு சென்றாலும் எனக்கு மக்கள் கொடுக்கும் அன்பு எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.
“ஒருமுறை நான் ஒரு தாயின் வீட்டுக்கு சென்ற போது அவர் சாப்பாட்டை அள்ளி அள்ளி என் வாயில் திணித்தார். அப்போது என் முகம் எல்லாம் சாப்பாடு ஒட்டிக்கொண்டது. அவர் ஊட்டி விட்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் அன்பு மட்டும் தான் தெரிந்தது.” என்றார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் ஏழை விவசாயிகள் 10 பேருக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது உள்ளிட்ட பல சேவைகளை செய்து வருகிறார். ஆதரவற்ற ஏராளமான குழந்தைகளுக்கு வாழ்க்கை கொடுத்து கல்வி கொடுத்து தற்போது வேலையும் வாங்கி கொடுத்து அவர்களை உயரத்தில் வைத்து அழகு பார்த்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.
விளையாட்டுத் துறையிலும், படைப்புக்கும் வெற்றிக்கும் ஏங்கும் இளைஞர்களுக்கும் ராகவா லாரன்ஸ், பாலா ஆகியோர் இணைந்து பல்வேறு நன்மைகளை செய்து வருகின்றனர்.