சர்வதேச இளம் இயக்குனரான தஞ்சை சிறுமி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பூர்ணிமா கார்த்திகேயன் தம்பதியின் இளைய மகள் அகஸ்தி. 12 வயதை ஆன இவர் கொரோனா காலத்தில் கதை எழுத தொடங்கினார். கற்பனை திறனால் அதிக அளவு ஈர்ப்பை ஏற்படுத்தும் அளவில் 11 வயதிலேயே கதை எழுதினார்.

பள்ளியில் நடப்பவை, பெற்றோர் குழந்தைகளை நடத்தும் விதம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இயல்பாவும் எளிமையாகவும் கதை எழுதினார் சிறுமி அகஸ்தி. இவர், கல்வி மட்டும் இன்றி விளையாட்டிலும் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்று வந்த நிலையில் கதை எழுதும் வாய்ப்பு அவருக்கு தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் தந்தது.

பின் ஓராண்டு காலம் ஆன்லைனில் அனிமேஷன் பயிற்சி பெற்றார். தான் எழுதிய கதையை மையப்படுத்தி ஒரு படம் எடுக்க இருப்பதாகவும் அதை அனிமேஷன் கதையாக எடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதைக் கேட்டு வியந்து போன தாயும் தந்தையும் மகிழ்ந்து பாராட்டினர். ஆனால் படமாக எடுக்க முடியாது என அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். பின் தனது விடாமுயற்சியின் காரணமாக குண்டான்-சட்டி என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

இவரது விடாமுயற்சியும் கடின உழைப்பையும் பார்த்த அவரது பெற்றோர் அனிமேஷன் படங்களை இயக்க சம்மதித்தனர். தனது தாயார் பெயரில் அவரது தந்தை கார்த்திக் செல்லம்மா என்ற ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இரண்டு ஆண்டுகளாக அனிமேஷன் படம் உருவானது.

இதற்கு சிறுமியான அகஸ்தியே இயக்குனராக இருந்தார். இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை 120 திரையரங்குகளில் வெளியானது. 2 மணி நேரம் அதாவது முழு நீள அனிமேஷன் திரைப்படம் இயக்கிய சிறுமி என பி கே அகஸ்தி சர்வதேச திரைப்பட வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

என்ன கதை?

குப்பன்-சுப்பன் என இருவர். அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. குண்டான் சட்டி என அவற்றுக்கு பெயர் வைத்தனர். அந்த இரு சிறார்களும் செய்யும் சேட்டைகள் அந்தப் படத்தில் இடம்பெற்றன.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE