இந்தியத் தயாரிப்பில் உருவான திரைப்படத்துக்குக் கிடைத்த முதல் ஆஸ்கர் விருதை கம்பீரமாக பிடித்து நிற்கிறார்  படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா. இந்திய சினிமாவை உலகத்தரத்துக்கு உயர்த்திப் பிடித்த இரு பெண்களும் தமிழ்நாட்டின் கட்டுநாயக்க பழங்குடியின வாழ்வியலை படமாக்கியவர்கள்.

‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் ஆஸ்கர் வென்று அசத்தியுள்ளது.

ஏன் ஆஸ்கர் மீது அவ்வளவு ஏக்கம்?

எத்தனையோ திரைப்பட விருதுகள் இருந்தாலும் ஆஸ்கர் என்பது உலகளவில் ஏமாளமான கலைஞர்கள் ஏங்கிச் சாகும் ஒரு வரமாகும். இந்தப் பந்தயத்தில் ஓடுபவர்களுக்கு இந்த விருதில் நாமினேசன் ஆவதே வாழ்வின் பெரிய சாதனையாகக் கருதப்படும். ஏற்கெனவே தங்கள் கனவின் விளிம்பு வரை சென்றுவிட்டு கரம் சேராது வந்த தமிழ்படங்கள், ஆவணப் படங்கள் உண்டு. இது படைப்பாளிகளுக்கும் மட்டுமின்றி ரசிகர்களுக்குமே ஒரு தீராப் பசியாக இருந்து கொண்டே தான் உள்ளது. இந்த ஏக்கத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டது “ஆஸ்கர் விருதுகள் 2023”

அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது அகாடமி விருதுகளை தீபிகா படுகோனே, ஜிம்மி கிம்மல் உள்ளிட்டோர் தொகுத்து வழங்கினார்.

ஆஸ்கர் விருதுகளில் முழு நீளத் திரைப்படம் மட்டுமின்றி, சிறந்த டாகுமென்டரி குறும்படம், சிறந்த குறும்படம், சிறந்த இசை, சிறந்த இயக்குநர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், சிறந்த பாடகர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பப்படும். அதில் சிறந்த டாக்குமென்ட்ரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. தமிழ்நாட்டில் இப்படம் எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருது வென்றுள்ளது தமிழர்களாகவும், இந்தியகைளாகவும் உள்ள ஆவணப்பட ரசிகர்களையும், ஆஸ்கர் ரசிகர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது.

Tamil Kattunayakkar Bomman Belli Raising 2 elephant calves. oscar Won The ”The Elephnat Whisperers”

ஆவணக் குறும்பட கதை என்ன?

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமா உள்ளது தெப்பக்கா. இங்கு பொம்மன், பெள்ளி என்ற காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யூர் பகுதியில் 2017-ம் ஆண்டு, தாயிடமிருந்து ஒரு குட்டி ஆண் யானை பிரிந்து காயமடைகிறது. தனியே சுற்றித் திரிந்த அந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வருகின்றனர்.அதற்கு பொம்மனும், பெள்ளியும் ரகு என பெயர் வைத்து பராமரித்து வருகின்றனர்.

From The Elephant Whisperers Movie

தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானை குட்டிகளை பராமரிக்கும் பழங்குடியினத் தம்பதியின் கதையை ஆவணப்படமாக்கி இருக்கிறார் உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ். ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற இந்த ஆவணக்குறும்படத்துக்குத் தான் தற்போது ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

முன்னதாக, சிறந்த டாகுமென்டரி திரைப்படப் பிரிவில் இடம்பெற்ற இந்திய திரைப்படமான ஆர் தட் ப்ரீத்ஸ் படம் ஆஸ்கர் விருது வெல்லவில்லை.

சேலை அணிந்து ஆஸ்கர் விருது

முதன் முறையாக இந்தியத் தயாரிப்புக்குக் கிடைக்கும் ஆஸ்கர் விருதை இரு பெண்கள் பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் குனீத் மோங்கா. பிங்க் நிற புடவை அணிந்து சென்று அவர் ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார். தனது படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ள குனீத் மோங்கா, தனது கணவருக்கும் நன்றி கூறியுள்ளார். “ஹேப்பி 3 மன்த்ஸ் ஆனிவர்சரி பேபி” எனக் குறிப்பிட்டதன் மூலம் திருமணமாகி மூன்றே மாதங்களில் அவருக்கு இந்த விருது கிடைப்பதாக யூகிக்க முடிகிறது. லைவாக விருது வாங்குவதைக் கண்டு படக்குழுவினர் வீடியோ கான்பிரன்சிங்கில் இணைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகளும் இங்கு காணலாம். படத்தைப் பற்றிப் பேசும்போது குனீத் நாங்கள் தமிழ் கட்டுநாயக்கர் படம் எடுத்திருப்பதாக பெருமிதமாகத் தெரிவிப்பதையும் இங்கு காணலாம்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE