திரையுலகில் நடிகர்களுடன் ஒப்பிடும்போது நடிகைகளுக்கான சம்பளம் மிகக் குறைவு. அதிலும் நடிகர்கள் நீண்ட ஆண்டுகள் சர்வைவ் ஆகுவது போல், திரை உலகில் நடிகைகளால் மிக நீண்ட ஆண்டுகள் தொடர்ச்சியாக நடிப்பது மிகவும் குறைவு.

திருமணமான பின்னும், குழந்தை பிறந்த பின்னும் பல நடிகைகள் திரைத்துறைக்கு முழுக்கு போடுவதை காண முடிகிறது. இதனால் வாழ்வில் சில ஆண்டுகளே நீடிக்கும் தொழிலை மட்டும் நம்பியிருக்காமல், அவர்களில் பலரும் சைடு பிசினஸ்களை செய்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் செய்யும் தொழில்கள் பின்வருமாறு.

நயன்தாரா

நடிகை நயன்தாரா Dermatologist உடன் இணைந்து “the lip balm company ” என்ற Cosmetic பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தையும், “Chaai Wala” என்ற நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் துபாயில் எண்ணெய் தொழிலில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திலும் நயன்தாராவிற்கு பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா விரைவில் பிசினஸிலும் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வர வாய்ப்புள்ளது.

சமந்தா

நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின் முழு மூச்சில் படங்களில் நடித்து வருகிறார். உடல் நலம் சரியில்லாத போதும் அவர் தன்னை பிஸியாக வைத்துக் கொள்வதில் தவறுவதில்லை. தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஜிம் வொர்க் அவுட், ஷூட்டிங்கில் உள்ள படங்களை அவ்வப்போது பகிர்ந்து அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். இருந்த போதும் சினிமா மட்டுமின்றி இவருக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து SVS பார்ட்னர் என்ற பெயரில் LLP நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்து வருகிறது இந்த நிறுவனம். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கான கல்வி மையத்தையும் நடத்தி வருகிறார் . Saaki என்ற பெயரில் துணிக்கடையும் சமந்தா நடத்தி வருகிறார்.

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி Isidro என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பல மொழிகளில் எடுக்கப்படும் குறும்படங்கள், இசை படைப்புகள், மல்டிமீடியா கன்டென்ட்களை தயாரித்து வருகிறார்.

ரகுல் பிரீத் சிங்

ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தீரன் அதிகாரம் 1 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தனது சுட்டித்தனமான நடிப்பினால் ரசிகர்களின் மனம் கவர்ந்த ரகுல் ப்ரீத் சிங் தமிழ் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஃபேஷன் ஷோக்களில் மாடல் அழகியாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங், ஹைதராபாத்தில் 2 ஜிம் மற்றும் உடற்பயிற்சி மையத்தை நடத்தி வருவதோடு, விசாகப்பட்டினத்திலும் ஜிம்மை ஒன்றை நடத்தி வருகிறார்.

காஜல் அகர்வால்

தமிழ் திரைப்படங்களின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து தற்போது குழந்தை, குடும்பம் என செட்டில் ஆனவர் காஜல். விளம்பர படங்கள் படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கும் ஒரு சைடு பிஸ்னஸ் உண்டு. ‘Marsala’ என்ற பெயரில் தனியாக ஆபரண நிறுவனத்தை நடத்தி வருகிறார் காஜல் அகர்வால்.

தமன்னா

தென் இந்திய திரைப்படங்களில் தனத திறமை வெளிக்காட்டிய நடிகை தமன்னா தற்போது இந்தித் திரை உலகில் படு பிஸியாக நடித்து வருகிறார். மற்ற நடிகைகளைப் போலவே இவரும் சைடு பிசினஸை மேற்கொண்டு வருகிறார். ‘Wite and Gold’என்ற பெயரில் உருவாகும் தமன்னாவின் நிறுவனத்துடைய நகைகள் நகைப் பிரியர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்ரேயா சரன்

ஸ்ரேயா சரன்

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் வலம் வந்த ஸ்ரேயா தற்போது கணவர், குழந்தை என குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருக்கிறார். குடும்பம் ஒரு புறம் என்றாலும், மும்பையில் ஸ்பா ஒன்றையும் நடத்தி வருகிறார் ஸ்ரேயா. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை கொண்டு இவர் நடத்தும் ஸ்பா மற்றும் வெல்னஸ் சென்டருக்கு மும்பை வாசிகளை அதிகம் கவர்ந்துள்ளது.

Facebook
Instagram
YOUTUBE