வீடே உலகமாகி போன பெண்கள். ஆண்களின் அன்றாட பணிகளுக்காக மட்டுமே தாங்கள் வாழ்வதாக சிறிய வட்டத்துக்குள் வாழ்பவர்கள். மூன்று வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த இந்தப் பெண்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு ‘ரோட் ட்ரிப்’ செல்வதே இந்த வெப் சீரிசின் மையக் கருவாக உள்ளது.

தனது கிரிக்கெட்டர் லட்சியத்தை மதிக்காத பாய் பிரண்டிடமிருந்து பிரேக் எடுக்க நினைக்கும் பெண் ஒருபுறம். எப்போது பார்த்தாலும் வீட்டு வேலைக்குதான் நேர்ந்து விடப்பட்டதாக திணறிவந்த போது தன்னாலும் தனியே இயங்க முடியும் என தனது கணவருக்கு காட்ட நினைக்கும் பெண் ஒரு புறம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்காமல் இறுதி நாளுக்குள் உலகத்தை பார்க்க ஏங்கும் பெண் ஒருபுறம். இவர்கள் மூவரும் மாமியார் – மருமகள் – பேத்தியாக படத்தில் நடித்துள்ளனர். ஒரே வீட்டுக்குள் இருந்து கொண்டு போன் மூலம் திட்டம் தீட்டி, கையில் சிக்கிய காசைக் கொண்டு ரோட் டிரிப்புக்கு எஸ்கேப் ஆகும் காட்சிகள் அருமை. வீட்டின் இறுக்கமான சூழலையும், வெளி உலகின் அழகான ரம்யத்தையும் காட்சிப் படுத்தியுள்ள விதம் பாராட்டுக்குரியது.

நடிப்பு-இயக்கம்

நடிகைகள் லட்சுமி-மதுபாலா-சாந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். வம்சி கிருஷ்ணா, கவின் ஜெய்பாபு, பாலா சுரேஷ் மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 8 எபிசோடுகள் கொண்ட இந்த கதையை விஜய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, சுவாதி ரகுராமன் இயக்கியுள்ளனர்.

விமர்சனங்கள் என்ன?

இப்படம் பார்க்கும்போது மனம் இலகுவாவதாகக் கூறியுள்ளனர். போரடிக்காமல் மென்மையான இசை மற்றும் அழகான காட்சிப் பின்னணியால் கவர்ந்திழுக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.

என்னென்ன மொழிகளில் ரிலீஸ்?

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்தத் தொடர் வெளியாகி உள்ளது. ஜூலை 6 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் காண கிடக்கிறது

கம் பேக் கொடுத்த நடிகை லட்சுமி

பழங்கால நடிகையான லட்சுமி நீண்ட காலத்துக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தின் தாயாக படையப்பா படத்தில் கெத்தாக நடித்திருப்பார். இதையடுத்து பெரும்பாலான வாய்ப்புக்கள் வந்து அவர் நடிப்பில் இருந்து சற்று ஓய்வில் இருந்தார். நடிகை லட்சுமி நடிகர் கமலஹாசனின் படமான உன்னைப்போல் ஒருவன் படத்தில் தலைமைச் செயலாளராக நடித்திருப்பார். அதன்பின் பல்வேறு இயக்குனர்கள் கதை கூறியும் நடிக்க மறுத்து வந்த நிலையில் இந்த வெப் சீரிசுக்கு அவர் சம்மதம் தெரிவித்து மிக அழகாகவும் நடித்துக் கொடுத்துள்ளார்.

இது போன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள த காரிகையின் சமூக வலைதள பக்கங்களை பின்தொடருங்கள்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE