மீன் குழம்போடு விண்வெளி சென்று குத்தாட்டம் போட்ட சுனிதா வில்லியம்ஸ்

மழை, வானவில், நிலா, நட்சத்திரம் ஆகியவற்றை வெகுதொலைவில் உள்ள பூமியிலிருந்து பார்த்தாலே நம் மனம் குத்தாட்டம் போடும். அப்படி இருக்க 3வது முறையாக விண்வெளிக்கே சென்று அசத்தி இருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். அவர் ஆடாவிட்டால் தான் ஆச்சரியம்.

அதுவும் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி கலனுக்குள் நுழையும் போதே குஷியாக ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

58 வயதிலும் இப்படி ஒரு எனர்ஜியா என்று மக்கள் பிரமித்து பார்த்திருக்கும் நேரத்தில், ஒரு சிலருக்கு சுனிதா வில்லியம்ஸ் யார் என்பது நினைவிருக்கலாம்.

அப்படி அவர் யார் என்பதை மறந்தவர்களுக்கு நினைவூட்டுகிறது த காரிகை.

யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?

இந்தியாவின் குஜராத்தை சேர்ந்த தீபக் பாண்டியாவுக்கும் ஸ்லோவேனியாவை சேர்ந்த போனி பாண்டியாவுக்கும் பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் பிறந்த சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்க ராணுவ அகாடமியிலே படித்தார்.

பைலட்டாக பயிற்சி பெற்ற இவருக்கு நாசாவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதைக் கச்சிதமாக பயன்படுத்தக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் தரை பயிற்சி, விண்வெளியில் வாழ்வது, விண்வெளியிலே நடப்பது, அங்கு உணவருந்துவது, அதற்கு தேவையான உடற்பயிற்சிகள், நீர் மற்றும் பிற வாயுக்கள் அடங்கிய தளங்களில் உயிர் வாழ்வது என பல்வேறு கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக திரும்பினார்.

விண்வெளியில் அதிக நாட்கள் செலவிட்ட பெண் என்றும் சாதனை படைத்தார் சுனிதா வில்லியம்ஸ். வேற்று கிரகத்தில் அதிக நாட்கள் நடந்த சாதனையையும் இவர் படைத்திருந்தார்.

ஏற்கனவே 2 முறை விண்வெளிக்கு சென்று வந்துவிட்ட சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக ஸ்டார் லைனர் என்ற விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை எட்டி உள்ளார்.

மீன் குழம்பு

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு சென்றாலும் தனது வீட்டை மிஸ் செய்யக்கூடாது என்பதற்காக ஏற்கனவே கடந்த முறை சமோசா எடுத்துச் சென்றார்.

ஆனால் இந்த முறை சமோசாவுக்கு பதிலாக மீன் குழம்பை சூடாக எடுத்துச் சென்றதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது சாப்பிடும் போது அவர் வீட்டிலேயே இருப்பதாக உணர்வார் என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் திருமண வாழ்க்கை

16 ஆண்டுகளுக்கு முன் சுனிதா வில்லியம்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாதபோதும் செல்லமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகின்றனர்.

சுனிதாவின் இந்தியா வருகை

2007 ஆம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவில் தனது பூர்வீகமான குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு வந்தார். அங்கு தனது சகோதரியின் மகன் பிறந்தநாளை கொண்டாடிய அவருக்கு அமெரிக்கா திரும்பும் முன்னதாக சர்தார் வல்லபாய் பட்டேல் விஷ்வ பிரதீபா விருது வழங்கப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த பிரதிபா பாட்டீலையும் சுனிதா வில்லியம்ஸ் சந்தித்திருந்தார்.

இந்த முறை சுனிதா வில்லியம்ஸ் சென்று இருப்பது மிகக் குறுகிய கால பயணமாகும். இது முடித்ததும் அவர் பூமிக்கு திரும்புவார்.

இந்தியாவில் பிறக்காவிட்டாலும் இந்திய வம்சாவளிக்கே சுனிதா வில்லியம்ஸ் பெருமை சேர்ப்பதாக நெட்டிசன்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

Facebook
Instagram
YOUTUBE