வழக்கத்தை விடவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது வெயில். இதனால் முற்றிலும் டீ ஹைட்ரேட் ஆகி உதடு வறண்டு காதில் புகை வர வெளியே இருந்து வீட்டுக்குள் வருபவர்களுக்கு வெறும் தண்ணீரை மட்டும் கொடுத்தால் போதாது.

கோடை விடுமுறை விட்ட பின்பு குழந்தைகளும் பெரும்பாலும் வெயிலிலேயே தான் விளையாட தொடங்குகின்றனர்.

எனவே சுட்டெரிக்கும் சூரியன் அவர்களின் ஒட்டுமொத்த நீர்ச்சத்தையும் உறிஞ்சி எடுத்து விடும் பட்சத்தில், குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

இது குழந்தைகள் முதல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பெரியவர்களாக இருந்தாலும் அவர்களும் சாப்பிட வேண்டிய சம்மர் சூப்பர் ஃபுட்களாக இருக்கும்.

நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்றாலும் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றவுடன் எதை வாங்குவது என்று தெரியாமல் சற்று குழப்பமாக இருக்கும். எனவே கண்களில் பட்டவற்றை முதலில் வாங்கிப் போட்டுவிட்டு வந்து விடுவோம்.

அப்படி நீர்ச்சத்து மிக்க காய்கறிகள் பழங்களின் அவசியம் உங்களுக்கு புரிய வேண்டும்.

தர்பூசணி.

நீர் சத்துள்ள படங்களில் முதன்மையானது தர்பூசணி.

அதுமட்டுமின்றி வெள்ளரிக்காய், சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆகிய பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பச்சையான பசுமையான காய்கறிகள் கீரைகள், புதினா ஆகியவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.

குறிப்பாக பூசணி அரசானி சுரைக்காய் போன்ற நீர் காய்கள் நல்லது.

நீர் பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமின்றி மோரும் பருகலாம்.

ஒரு சிலர் மோர் ருசியாக இருக்க வேண்டும் என்பதற்காக இஞ்சி கொத்தமல்லி உள்ளிட்டவற்றை போட்டு மசாலா மோராக பருகிவிடுவார்கள். குளுமையான மோரை வெறும் உப்பு மட்டும் போட்டு அப்படியே பருகுவது கூட உடலுக்கு நல்லது தான்.

பாதாம், ஆப்பிள், அவகேடோ, மாதுளை, பெர்ரிக்களும் சம்மருக்கு ஏற்ற சில்லிங் உணவுகள்தான்.

எளிதில் ஜீரணிக்காத ஆடு கோழி உள்ளிட்டவற்றை சாப்பிடுவதை விடவெயில் காலத்தில் மீன் சாப்பிடுவது நல்லது.

பழங்களில் முலாம்பழமும் அதன் சாறும் மிகச்சிறந்தது. அதுவும் குறிப்பாக வெயில் காலத்துக்கு இழந்த நீர்ச்சத்தை ஏற்ற உதவும்.

உங்களுக்கு திடீரென நீர் இழப்பு ஏற்படுவதாக இருந்தால் நீங்கள் குளுக்கோஸ் அல்லது உப்பு சர்க்கரை கலந்த தண்ணீரை பருகுவது நல்லது. ஆனால் இது நீர் சத்துக் குறைபாடு காரணம்தானா? அல்லது சர்க்கரை பிபி போன்ற காரணங்களால் என்பதையும் நன்கு தெரிந்து கொள்வது அவசியம்.

வெயில் காலத்தில் வெளியே செல்கிறீர்கள் என்றால் இளநீர் கடையை பார்த்தால் கண்டிப்பாக வண்டியை நிறுத்தி ஒன்றாவது வாங்கி பருகுங்கள்.

ஏனெனில் அடிக்கும் வெயிலுக்கு உடல் சற்று குளிர்ச்சியாக இல்லாவிட்டால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படலாம். Heatstroke என்ற வியாதி கூட வரலாம்.

உணவில் தினம்தோறும் தயிர் சாப்பிட்டு வருவது உடலுக்கு சற்று குளுமையை தரும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE