பண விஷயத்தில் நான் கறார் – சுதாமூர்த்தி
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் பெட்டர் ஹாஃப் சுதாமூர்த்தி. பண விஷயத்தில் “நான் ஒரு கறாரான பார்ட்டி” என்றும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
யார் இந்த சுதா மூர்த்தி?
கல்வியாளர், பெண் தொழில் முனைவோர் என பன்முகத்தன்மை கொண்ட சகலகலா ராணியாக வலம் வரும் இவர், பத்ம பூசண் விருதும் பெற்றவர். இவர் சமீபத்தில் பெற்றுள்ள இன்னொரு பெருமைமிகு பொறுப்பு, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் என்பதாகும். இவர் தனது ஆரம்பகால திருமண வாழ்க்கை பற்றி பல்வேறு சுவாரஸ்மான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
“வாடகை வீட்டில் தொடங்கிய இந்திய கம்ப்யூட்டர் புரட்சி”
தனது ஆரம்பகால திருமண வாழ்க்கை ஒரு மிடில்கிளாஸ் வாழ்வு என்று சுதாமூர்த்தி கூறினார். இதுகுறித்து பேசிய அவர், “திருமணம் ஆகும் போது தனது கணவர் பணியில் இல்லை, மும்பையில் ஒரு வாடகை வீட்டில்தான் வசித்தோம். இந்தியாவில் கம்ப்யூட்டர் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற கனவைப் பற்றி வெகுநேரம் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரது நோக்கத்தின் நன்மையைத் நான் உணர்ந்திருந்ததால் அதன் முக்கியத்துவம் அறிந்து நடந்துகொண்டேன்”
“அடுத்த 3 ஆண்டு நீ மட்டும் சம்பாதி”
பேட்டியின் போது தான் தனது குடும்பத்தைத் தாங்கும் பாரத்தை ஏற்றுக் கொண்டதையும் அவர் நேயர்களுடன் பகிர்ந்துகொண்டார். “அடுத்த 3 ஆண்டுகளுக்கு என்னிடம் இருந்து எவ்வித வருவாயும் எதிர்பார்க்காதே” என்றார் நாராயணமூர்த்தி. அதை தான் திகைக்காமல் கேட்டு நின்றதாகவும் சுதாமூர்த்தி பகிர்ந்துள்ளார். “சுதா, நீதான் அடுத்த 3 ஆண்டுகள் சம்பாதித்து குடும்பத்தை முன்னின்று வழிநடத்த வேண்டும்” என்றும் நாராயண மூர்த்தி கேட்டுக் கொண்டிருந்தாராம்.
ரூ.10,000 கணவருக்குக் கடன் தந்தேன்
கணவருக்கே முதலீட்டுக் கடன்
பணிக்கு செல்ல சம்மதித்தார் சுதா மூர்த்தி. இன்ஃபோசிஸ் முதலீட்டுக்காக தனது சேமிப்பான ரூ.10,250-லிருந்து ரூ.10,000-ஐ கடனாக வழங்கினாராம். அந்த முதலீடு தான் பின்நாட்களில் பல 100 கோடி ரூபாயாக திரும்ப வந்ததாக பெருமிதத்தோடு குறிப்பிட்டார் சுதாமூர்த்தி.
கடனைத் திரும்பப் பெற்றீர்களா?
“கடனாகப் பெற்ற ரூ.10,000 பணத்தை திரும்பக் கொடுத்தாரா? அல்லது அனைத்தும் உனக்குத்தானே என டயலாக் விட்டாரா?” என நெறியாளர் கேள்வி கேட்டார். அதற்கு “பண விஷயத்தில் நான் ஒரு குல்கர்னி, அவர் எத்தனை சம்பாதித்து வீடு சேர்த்தாலும் என் கடன் திருப்பித் தர வேண்டியது தான்” என கறாராகக் கூறியதாக தெரிவித்தார்.
பெண்களுக்கு அட்வைஸ்
“குடும்பம் நடத்தும் பெண்கள் கணவருக்குத் தெரியாமல் ஒரு தொகையை சேமிக்க வேண்டும். அப்போதுதான், அவர்களுக்கு கடினமான நேரத்தில் உதவ முடியும்” என்றார். குடும்ப வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு பற்றி அடிக்கடி ஆக்கப்பூர்வ அட்வைஸ்களை வழங்கி வருகிறார் சுதா மூர்த்தி. சமீப காலமாக மக்கள் இவரது பேச்சை ஆர்வத்தோடு கேட்டு வருகின்றனர்.
இது போன்ற அப்டேட்டுக்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள “த காரிகை”யின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள்.