இந்தத் தேர்தலில் போராடித் தோற்ற பெண்கள் யார்? யார்?

நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களைவைக்கு சென்று மக்களின் குரலாக ஒலிக்கப் போகும் பெண்கள் ஐவர் பற்றிய விவரங்களைக் காண இங்கு கிளிக் செய்யவும். தற்போது இந்தத் தேர்தலில் போராடித் தோற்றவர்களின் விவரங்களைத் தற்போது விரிவாகப் பார்க்கலாம்.

ராதிகா

விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை ராதிகா போட்டியிட்டார். சமத்துவ மக்கள் கட்சியை, பா.ஜ.க-வோடு இணைத்த பின், கணவர் சரத்குமாருடன், பாஜகவில் உறுப்பினரானார். விருதுநகர் தொகுதியில் தேமுதிக கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 380877 வாக்குகள் பெற்று 2ம் இடத்தையும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 166271 வாக்குகள் பெற்று 3வது இடத்தையும் பிடித்து தோல்வி அடைந்தார்.

தமிழிசை சவுந்தரராஜன்

தந்தை குமரி அனந்தன், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவராக இருந்தபோதும் பாஜகவில் இணைந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். அக்கட்சியின் தேசிய செயலாளர், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர், தெலங்கானாவின் ஆளுநராகப் பதவி வகித்த தமிழிசை, அப்பதவியை ராஜனாமா செய்துவிட்டு, இந்தத் தேர்தலில் களமிறங்கினார். 2006, 2011 சட்டமன்றத் தேர்தல்கள், 2009, 2019 நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து, 2024 தேர்தலிலும் தோல்வியைத் தழுவினார். தென் சென்னையில் போட்டியிட்ட அவர், 2,65,530 வாக்குகளைப் பெற்று 2-ம் இடம் பிடித்தார்.

வீரப்பன் மகள் வித்யா

கிருஷ்ணகிரி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி. 33 வயதாகும் வித்யா சட்டப்படிப்பு பயின்று, பள்ளிக்கூடம் ஒன்றையும் நடத்தி வருகிறார். தண்ணீர் தேவையில் தன்னிறைவு, விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு, இளைஞர்களுக்கு சுயதொழில், கிருஷ்ணகிரியில் ரயில் நிலையம், வனவிலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையேயான விலங்கு-மனித மோதலைத் தடுக்க வனப்பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள், கிராமங்களில் தரமான சாலை, பேருந்து வசதி என வாக்குறுதிகளை அள்ளி வீசிய போதும், வித்யா ராணி 1,07,083 வாக்குகள் பெற்று 4-ம் இடம் பிடித்தார்.

சௌமியா அன்புமணி

தருமபுரி தொகுதி பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி, தைலாபுரம் தோட்டத்தின் மருமகள். போட்டியிடுவது முதன்முறை என்றாலும் தேர்தல் களத்தில் கவனம் ஈர்க்கும் வகையில் பிரச்சாரம் செய்து வந்தார். முனைவர், எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர் என பன்முகம் கொண்ட சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகள் பெற்றும் தோல்வியுற்றார். 21,300 வாக்குகள் வித்யாசத்தில் திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றியை வசப்படுத்

ஜான்சி ராணி

நெல்லையில் சுய உதவிக்குழுக்கள் மூலம் அறிமுகமாகிய அ.தி.மு.க வேட்பாளர் ஜான்சி ராணி, திசையன்விளை பேரூராட்சி தலைவரானார். நெய்யாறு இடதுகரை கால்வாயில் கேரள அரசு தண்ணீர் விடவில்லை என்ற கருத்தையும், மருத்துவக் கழிவையும், இறைச்சிக் கழிவுகளையும் கேரளா தொகுதிக்குள் கொட்ட அனுமதிக்காமல், அப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகவும் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். . அத்துடன், கேரளாவின் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் தொகுதிக்குள் கொட்டப்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பேன்’ எனக்கூறி தொகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். இருப்பினும் இந்தத் தேர்தலில், ஜான்சி ராணி 61,347 வாக்குகள் மட்டுமே பெற்று, 3-ம் இடம் பிடித்தார்.

பி. கார்த்தியாயினி

திருவண்ணாமலையைச் சேர்ந்த பி. கார்த்தியாயினி, 2011-ல் அ.தி.மு.க சார்பில் வேலூர் மேயர் ஆகி, பின், 2017.,ல் பாஜவில் இணைந்தார். சிதம்பரம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி 1,68,493 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 3வது இடத்தைப் பிடித்தார். ஜெயலலிதா உள்பட 4 பேர் சிறை செல்ல வேண்டும் என தீர்ப்பளித்த டி.குன்ஹாவையும், அவரது தீர்ப்பையும் விமர்சித்தும், எதிர்த்தும் வேலூர் மாநகராட்சியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியவர்தான் இந்த கார்த்தியாயினி.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE