யார் இந்த சௌமியா அன்புமணி?
அரசியல் அதகலத்துக்குள் இதுவரை அதிகளவு முகம் காட்டாத ஒரு பெண் முகம் தற்போது அரசியலுக்குள் பிரவேசித்து தர்மபுரி மக்களவைத் தொகுதியில் எம் பி ஆகவும் போட்டியிடுகிறார்.
இவர் பெயர் சௌமியா அன்புமணி. அன்புமணி ராமதாஸின் மனைவி ஆவார்.
இவர் அரசியலுக்கு புதிது என்ற போதிலும் ஏற்கனவே சமூக செயற்பாட்டாளராகவும் எழுத்தாளராகவும் நூல் ஆர்வலராகவும் தன்னை நிரூபித்து வந்தவர் தான்.
பசுமைத் தாயகம் என்ற அமைப்பின் தலைவராக உள்ள இவர் 2 லட்சம் மரக்கன்றுகளை தனது இயக்கம் மூலம் நட்டிருக்கிறார்.
மிகப் பழமையான ஆலமரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட்டும் அதற்கு பிறந்தநாள் விழா கூட கொண்டாடியவர் இவர்.
திருமணத்துக்கு முன்பிருந்தே சௌமியாவுக்கு அரசியல் ஒன்றும் அவ்வளவு தூரமாக இல்லை. இவரது தந்தை கூட ஒரு அரசியல்வாதி தான்.
இவரது தந்தையும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்தவர் எம்பி கிருஷ்ணமூர்த்தி. அரசியல் ரீதியாக எவ்வளவு பிஸியாக இருந்த போதிலும் ” மை டியர் செல்லங்களே!” என்று தான் தங்களை வாஞ்சையோடு அழைப்பார் என்று சௌமியா அன்புமணி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
வழக்கறிஞராகவும் இவரது தந்தை இருந்திருக்கிறார்.
தந்தை கணவன் என இரு எம்பி களையும் பார்த்த சௌமியா ஏற்கனவே கட்சியில் செயல்பட்டும் வந்திருக்கிறார்.
சௌமியாவுக்கு பதில் முன்னதாக அரசாங்கம் என்பவர் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் சௌமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் இது குடும்ப அரசியல் என்று சர்ச்சை எழுந்தது. ஆனால் அவர் மிகவும் தகுதியுடையவர் என்று ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இவர் தற்போது தர்மபுரியின் பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பெண் பிள்ளைகளை 4 கிலோமீட்டருக்குள் உட்பட்ட கல்லூரிகளில் படிக்க அனுப்பினால் பெற்றோருக்கு அச்சம் இருக்காது என்றும் பேசி வருகிறார். ஹிந்தி மொழி பேசிய அவரிடம் ஹிந்தியிலும் அவர் பிரச்சாரத்தில் பேசி வருகிறார்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கல்லூரி பேருந்தில் ஏறிய அவர் அங்கு பயிலும் மாணவிகளை பார்த்து, ‘ஒருவேளை உங்களது புகைப்படங்களையும் வீடியோக்களையும் யாரேனும் தவறாக சித்தரித்து ஆபாசமாக வெளியிடுவேன் என்று மிரட்டினால் ஒருபோதும் அவர்கள் பக்கம் அடிபணியாமல் பெற்றோரிடம் சரணடையுங்கள். 4 திட்டு, 10 நாட்கள் வீட்டுக்குள் பூட்டி வைத்தல், உறவினர்களும், உடன் படிப்போரும் தவறாக பேசுதல் போன்ற பிரச்சினைகளை விட வாழ்நாள் முழுவதும் தவறானவர்களின் கையில் சிக்கிவிடாது வாழ்க்கையை தொலைக்காது இருத்தலே சிறப்பு” என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.