அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதுக்கு என முடக்கிப் போட்ட பெண்கள் தற்போது முட்டி மோதி, ஆண்களுக்கும் அவர்களின் பணிகளுக்கு சவால்விடும் வகையில் தற்போது வெகு வேகமாக முன்னேறி வருகின்றனர். அப்போது வட இந்தியாவைக் காட்டிலும், தென் இந்தியாவில்தான் பெண்கள் படிப்பிலும், பணிக்கு சேர்வதிலும் அதிரடியாக முன்னேறிவருகின்றனர்.

“இந்தியாவில்,கேம்பஸ் இன்டர்வியூக்களில் பெண்களின் பங்களிப்பு” என்ற பெயரில், ஹையர் புரோ என்ற வேலைவாய்ப்பு ஆட்டோமேஷன் நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதாவது பி டெக் படிப்புக்களில் ஆண்டுதோறும் நடைபெறும் கேம்பஸ் இன்டர்வியூக்களில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? எத்தனை பேர் பணியில் சேர்ந்தனர்? என்பது பற்றி ஆய்வு நடத்தியது.

அந்த வகையில், எந்தெந்த பிராந்தியத்தைச் சேர்ந்த பெண்கள் எத்தனை பேர் கேம்பஸ் இன்டர்வியூக்களில் தேர்வாகியுள்ளனர் என அது பல்வேறு தரவுகளைக் கணக்கில் எடுத்து வெளியிட்டுள்ளது.

அதில் 2022-ம் ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூக்களில் 35 சதவீதம் பேர் பெண்கள். அதுவே 2023-ல் தென்னிந்தியாவில் 39 சதவீதம் பெண்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியுள்ளனர்.

அதுவே, கிழக்கிந்தியப் பெண்கள் 24 சதவீதம் பேரும், மேற்கிந்தியாவில் 34 சதவீதம் பேரும், மத்திய இந்தியாவில் 28 சதவீதம் பேரும், வட இந்தியாவில் 27 சதவீதம் பெண்களும் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியுள்ளனர்.

இதில் ஐடி, பிஎஃப்எஸ்ஐ, மற்றும் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் ஆகிய துறைகளிலேயே அவர்கள் அதிகம் பணியாற்றுகின்றனர்.

தமிழகம், கேரளம், கர்நாடகாவை உள்ளடக்கிய தென்னிந்தியாவில்தான் நாட்டின் பிற மாநிலங்களை விட பாலின சமத்துவம் அதிகம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

பெண்கள் படிப்பறிவிலும் பணிக்குச் செல்வதிலும் அதிகளவு முன்னேறி வருவதும் தென்னிந்தியாவில்தான் எனவும் அந்த ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.

இதில் இருந்து எப்பாடு பட்டாவது பெண்களை படிக்க வைத்தே ஆக வேண்டும் என தென்னிந்தியப் பெற்றோர்கள் முனைப்போடு உழைத்துவருவதும் தெரியவருகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE