தென்னிந்திய திரையுலகில் பல நடிகர், நடிகைகள் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்களாக உள்ளனர். எவ்வளவுக்கு எவ்வளவு ரசிகர்களின் மனதைக் கவர்கின்றனரோ, அவ்வளவுக்கு அவ்வளவு திரையுலகில் சம்பளம் பெற்று அதிகம் சம்பாதிக்கவும் செய்துள்ளனர். இது அனைத்துமே ரசிகர்கள் அவர்களின் திரைப்படங்களையும், அதில் பணியாற்றிய கலைஞர்களையும் அங்கீகரித்து வழங்கிய உன்னதமான கவுரவம்.

சாமானியர்களின் பெரும்பாலான கனவு எப்படி ஒரு சொந்த வீடாக இருக்கிறதோ, அதே போல் தான் நடிகர்களுக்கும். குருவிக்கு தனியொரு கூடு உள்ளது போல் ஒவ்வொரு நடிகர்களும் தங்களின் திறமையில் குருவி போல் சிறுக சிறுக சேமித்து தங்களது சொந்த வீட்டில் முதலீடு செய்துள்ளனர். அவ்வாறு பலர் சொத்துக்களைக் குவித்திருந்தாலும், சமீப காலத்தில் அவர்கள் வாங்கிய வீடும், இடமும், அதன் மதிப்பும் இக்கட்டுரையில் உள்ளது.

  • தனுஷ்

நடிகர் தனுஷ் தனது மாமனாரான ரஜினிகாந்தின் வீட்டுக்கு அருகே ஆடம்பரமான பகுதியான போயஸ் கார்டனில் ஒரு வீட்டை கட்டியுள்ளார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும், அதுகுறித்த கூடுதல் தகவல்கள் இதோ. அந்த வீடு 19000 சதுர அடியில் அமைந்துள்ளது. அதன் மதிப்பு 150 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. அந்த வீடு 4 தளங்களைக் கொண்டுள்ளது.

  • கமல்ஹாசன்

தமிழ் திரையுலகில் பன்னெடுங்காலாக கோலோச்சும் ஆண்டவர் கமல்ஹாசன். இவரை ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்று பலரும் அழைப்பதுண்டு. அதை வைத்தே வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஒரு பாடல் அமைந்திருக்கும். “ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா, வேட்டிய போட்டு தாண்டவா? ஒரே காதல் ஊரில் இல்லையடா?”. ஆம், இவரின் வீடு அமைந்துள்ள இடம் ஆழ்வார்பேட்டையின் முக்கிய சாலை சந்திப்பில் தான். அதுமட்டுமின்றி இந்த ஆண்டவர் சமீபத்தில் 2 அபார்ட்மென்ட்களை சென்னையில் வாங்கியிருப்பதாக ஒரு தகவல் உண்டு. அவற்றின் மதிப்பு, 19 கோடியே 50 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

  • நாகார்ஜூன்

நடிகர் நாகார்ஜூன் அவரது தாய்மொழி மட்டுமின்றி தமிழ்மொழியிலும் பல படங்களில் நடித்தவர். அதில் குறிப்பிடத்தக்க படங்களாக சுட்டிக்குழந்தை, ரட்சகன், தோழா படங்களைக் கூறலாம். தற்போதும் திரையுலகில் தடம் பதித்து வரும் இவர் மட்டுமின்றி இவரது குடும்பத்தில் பல நடிகர்கள் உள்ளனர். அவரது மனைவி அமலாவும் ஒரு நடிகையே. தந்தை அக்கினேனி, மகன்கள் நாக சைதன்யா, அவரது தம்பி அகில் ஆகிய அனைவருமே திரையுலகில் முன்னணி நடிகர்கள். மருமகளாக இருந்த சமந்தாவும் அப்படியே. இதனிடையே, நாகார்ஜூனும் அவரது மனைவி அமலாவும் ஐதராபாத்தில் 42 கோடி ரூபாய்க்கு ஆடம்பர வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

  • அல்லு அர்ஜூன்

புஷ்பா பட நடிகரான அல்லு அர்ஜூனும் மக்களின் மனம் கவர்ந்த நடிகர். மிக நீண்ட ஆண்டுகளாக ஒரு திறமைமிக்க நடிகராக வலம் வருகிறார் அல்லு அர்ஜூன். அவர் ரசிகர்களின் மனம் கவர்ந்து அதிக சம்பளம் பெற்றவர். அவரது சேமிப்பில் உருவெடுத்துள்ளது அழகிய, சொகுசு வீடு. ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அல்லு அர்ஜூனுடைய வீட்டின் மதிப்பு 100 கோடி ரூபாய் ஆகும்.

  • பிரபாஸ்

பாகுபலி ஹீரோ பிரபாசும் சளைத்தவர் அல்ல. அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதில் அவர் சம்பாதித்து வருவதும் ஏராளம் தான். எனவே தனது வீட்டுக்கு அவர் வெகு தாராளமாகவே 60 கோடி செலவு செய்துள்ளார். அந்த வீடும் கூட ஐதராபாத்தில்தான் இருக்கிறதாம்.

  • சமந்தா

தென்னிந்திய திரையுலகம் மட்டுமின்றி ஹாலிவுட் சீரிஸ்களிலும் நடிக்கும் சமந்தாவும் திரையுலகில் வெற்றிகரமாக வலம்வரும் பிரபல நடிகைதான். இவரும் சமீபத்தில் ஐதராபாத்தில் பல சொத்துக்களையும், வீட்டையும், அபார்ட்மென்டையும் வாங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

  • மகேஷ் பாபு

நடிகர் மகேஷ்பாபுவும் அதே ஐதராபாத் பகுதியில், வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் வாங்கியதாகக் கூறப்படும் 2 வீடுகளின் மதிப்பும் 28 கோடி ரூபாய் ஆகும் எனக் கூறப்படுகிறது.

  • சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவியும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை சமீபத்தில் சென்னையில் வாங்கியுள்ளாராம். அவரது மாநிலத்தில் வீடுகள் இருந்தாலும், சென்னை வந்தால் தங்குவதற்கென்றே இந்த வீடு வாங்கப்பட்டுள்ளதாம்.

இதுபோன்ற அப்டேட்டுக்களை அடிக்கடி தெரிந்து கொள்ள த காரிகையின் சமூகவலைதளங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE