போட்டியில் வெற்றிக்கு வழிவகுத்த கேப்டன் ஓல்கா கார்மோனா. ஆனால் இந்த மகிழ்ச்சி நீடித்தது ஓரிரு நிமிடங்கள். கொண்டாடத் தொடங்கும் முன்பே, தந்தை இறந்த செய்தி பகிரப்பட்டது. உடைந்து போனார் ஓல்கா. ஸ்பெயினின் முகமாக மாறியிருக்கும் அவரைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது த காரிகை

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம். இந்த முறை எந்த நாடு வெல்லப் போகிறது என்ற பரபரப்பு பெரும்பாலான கால்பந்தாட்ட ரசிகர்களை ஆட்கொண்டிருந்தது.

பெண்களுக்கான FIFA உலகக் கோப்பை 2023 போட்டிகள், ஜூலை 20-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியின் கேப்டன் ஓல்கா கார்மோனா, தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 29-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

அரங்கம் அதிர்ந்தது. கரவொலிகள் கடல்தாண்டி ஒலித்தன. ஸ்பெயின் மக்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் துள்ளிக் குதித்தனர். வெற்றியைத் தேடித் தந்த மங்கை ஓல்காவும் தனது தந்தை இறந்தது கூட தெரியாமல் மகிழ்ச்சியில் திழைத்திருந்தார். தனது நீண்ட நாள் கனவு. தாய் நாட்டுக்குக் கோப்பையைப் பெற்றுத் தரும் தருணம் ஈடேறியிருந்தது. இப்படி ஒரு வெற்றியை ஸ்பெயினே கூட எதிர்பார்த்து இருந்திருக்காது. ஏனெனில் இந்த வெற்றி அந்நாட்டுக்கு மிக அரிது. இருப்பினும் அதை சாத்திமாக்கிய மங்கையைத் தேடி வந்தது ஒரு பெருஞ்செய்தி.

சாரி ஓல்கா உங்க அப்பா இறந்துட்டாரு எனக் கூறக் கேட்டதும் நொறுங்கிப் போனார் ஓல்கா. கை, கால்கள் படபடக்க அந்தச் செய்தியை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டார்.

இறுதிப்போட்டிக்கு முன்பே, ஓல்கா கார்மோனாவின் தந்தை இறந்துவிட்டார். எனினும், அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், தந்தையின் மறைவுச் செய்தியை அவருக்குத் தெரியப்படுத்தினால், போட்டியில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்று கருதி தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர்.

இறுதிப் போட்டிக்கு பிறகு ஓல்கா கார்மோனா வெளியிட்ட பதிவில், “இன்றிரவு நீங்கள் என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் என்னை பற்றி பெருமைப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நிம்மதியாக இருங்கள் அப்பா” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE