இப்டியெல்லாம் கூட பெண்கள் தங்கள பாதுகாத்துக்கலாமா?

தற்காலத்தில் ஒரு பெண் குழந்தையோ பெண்ணோ தனியாக பயணிக்கிறார் என்றால், பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கிட்டுத்தான் இருக்கனும். அப்டியில்லாம பொண்ணுங்களுக்கு பாதுகாப்ப சொல்லிக் கொடுக்கனும்னு நினைச்சீங்கன்னா, இதை முழுசா வாசியுங்க.

டிப்ஸ் கார்னர்

விமானம், ரயில், பேருந்து என மாறி மாறி பயணம் செய்யும்போது தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதையும் கருத்தில் கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டும்.

தாமதம் ஆகிறது என்று தெரிந்தால் போய் சேர வேண்டிய ஊரில், உங்களை வந்து அழைத்துச் செல்பவருக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஒருவேளை நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பினால் அதை அவர் பெற்றுக் கொண்டாரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் வாடகை வாகனத்தில் பயணிக்கும் போது உங்கள் ஓட்டுனர் சந்தேகத்துக்கு இடமான வகையில் பேசினால், அந்த சாலை வழியே ஏதேனும் ரோந்து வாகனத்தை பார்த்தால் அங்கே கொஞ்சம் வண்டியை நிறுத்துமாறு கூற வேண்டும்.

அத்தியாவசியமான பொருட்கள் அடங்கிய பையை மட்டும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கி காவல்துறையினரிடம் சென்று முறையிட வேண்டும்.

அவர்கள் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி, தவறு ஏதும் நடக்க வாய்ப்பில்லை என அவர்கள் கருதும் பட்சத்தில் உங்களை அதே ஓட்டுனரோடு அனுப்பி வைக்க வாய்ப்பு உண்டு.

ஆனால், அப்பொழுதும் அந்த ஓட்டுனரின் முக்கிய ஆவணங்களை போலீசார் பெற்றுக் கொண்டு, உங்கள் அலைபேசி எண்ணையும் பெற்றுக் கொள்வார்கள்.

நீங்கள் உரிய இடத்தில் பாதுகாப்பாக சென்று அடைந்தவுடன் போன் செய்து தகவல் தெரிவிக்குமாறு உங்களிடம் கூறுவார்கள்.

அதன்பின்னர் அந்த ஓட்டுனர் வந்து காவல் நிலையத்தில் அவருடைய ஆவணங்களை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தி அனுப்புவார்கள்.

இருப்பினும் காவல்துறை உங்களை பின்தொடர்ந்து வந்து பாதுகாப்பு கொடுக்கவும் வாய்ப்பு உண்டு.

எனவே தனியாக பயணிக்கும் போது ரோந்து வாகனங்களை பாதுகாப்புக்கு எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஆட்டோவில் பயணிக்கும் போது, அந்த ஆட்டோவின் உரிமையாளர் யார்? வாடகைக்கு ஓட்டும் ஓட்டுநர் யார்? அவர்கள் முகவரி புகைப்படம் உள்ளிட்டவை பயணிகள் அமரும் இருக்கைக்கு பார்வையில் படும்படி வைத்திருப்பார்கள்.

அதை உறுதி செய்து கொண்டு சந்தேகம் இருந்தால் அதனை புகைப்படம் எடுத்து நமக்கு உரியவருக்கு அனுப்பி வைத்துக் கொள்ளலாம்.

ஓட்டுனரின் பார்வையோ பேச்சோ சந்தேகத்திற்கு இடமாக தெரிந்தாலோ, வழக்கமாக செல்ல வேண்டிய வழியை விட்டு வேறு வழியில் சென்றாலோ உங்கள் உறவினருக்கோ நண்பருக்கோ தகவல் தெரிவிக்கலாம்.

இணையத்தில் மேப் போட்டு சரியான பாதையில் தான் செல்கிறாரா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

இதன் முதல் பாகத்தைக் காண இங்கு கிளிக் செய்யவும்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE