உக்காருற ஸ்டைல வெச்சே அடுத்தவங்க கேரக்டர சொல்லிடலாம்

நீங்கள் எப்படி அமர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் ஆளுமை தன்மையை அறியலாம்.. சிலர் கால் மேல் கால் போட்டுக்கொண்டோ, சிலர் ஒரு காலை எடுத்து மடியில் வைத்தோ உக்காருவார்கள்.

கால் மேல் கால் போட்டு அமர்தல் ( cross legged):

பகல் கனவு காண்பவர்களாக இருப்பார்கள். எப்போதும் பிறரை ஆச்சரியத்தில் ஆழ்த்த விரும்புவார்கள். எளிதில் நம்ப மாட்டார்கள். மிகுந்த தோழமை உணர்வுள்ளவர்கள்..

இவர்களிடம், எந்தத் தலைப்பு வேண்டுமானாலும் கொடுத்து பாருங்கள். மனம் கவர பேசுவார்கள். தேவையில்லாமல் யாரையும் மதிப்பிட மாட்டார்கள்.

மனதையும் ஆன்மாவையும் திருப்திப்படுத்துவார்கள்.வாழ்க்கைத்துணை மேல் மிகுந்த அக்கறை உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார்கள்.

கணுக்கால்களை குறுக்கே போட்டு அமர்பவர்கள் ((Ankles crossed):

லட்சியத்தை அடைவதற்கான ஆர்வத்தை தான் கொண்டிருப்பது மட்டுமின்றி, சுற்றி உள்ளவர்களுக்கும் கடத்துவார்கள்.

பணக்காரராக இருக்க விரும்புவார்கள். பிறர் பேசுவதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்பதால் பிறர் இவர்களிடம் எளிதில் ரகசியம் பகிர்வார்கள்.

தங்களைப் பற்றிய ஒரு சிறு விஷயத்தைக் கூட சொல்ல மாட்டார்கள். தம் நிழலைக்கூட பிறர் பின் தொடர விரும்ப மாட்டார்கள்.

ஆடை, அலங்காரங்கள் நாகரிகமாக இருக்கும். காதலிலும் திருமணத்திலும் மிகுந்த எச்சரிக்கையாக முடிவெடுப்பார்கடள்.

வலது காலை மடித்து தொடை மேல் போடுதல் (Figure 4 lock):

தன்னம்பிக்கை உடையவராகள். விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வார்வர்களாக,கள். பிறரை அதிகாரம் செய்ய விரும்புவராக இருப்பார்கள்.

மிகுந்த பக்குவப்பட்ட மனிதர் போல தோற்றமளித்தாலும் ஒரு விளையாட்டுத்தனம் இருக்கும்.

பிறரை சார்ந்து வாழ விரும்பாதவர். பிறரை அடக்கி ஆள நினைப்பார்கள்.

புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதிலும் அதிக ஆர்வம் இருக்கும். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் கல்வியிலும், பணியிலும் அக்கறை செலுத்துவார்கள்.

தங்களை பிறருக்கு நிரூபிக்க நினைக்க மாட்டார்கள். வாழ்க்கைத் துணையிடம் அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE