காலையில் செய்த அரிசி உப்புமா மிஞ்சிவிட்டால் உப்புமா கொழுக்கட்டை செஞ்சு பாருங்க. ரொம்பவும், சுவையாவும் ஹெல்தியாவும் ஈவ்னிங் ஸ்னேக்ஸ் செய்து கொடுத்து அசத்துங்க. அரிசி உப்மாவா? கைவலிக்க கிளறனுமேன்னு பயப்பட வேண்டாம். ரொம்பவே சிம்பிளான ரெசிபிதான் இது.

இந்தக் கொழுக்கட்டை பொதுவாக அரிசி ரவையில் செய்யக்கூடியது. இதை சாம்பார் மற்றும் சட்னியுடன் சேர்த்தோ, தாளித்த தயிரில் பிரட்டியோ சாப்பிட்டால், எக்செட்ராவாக ஒரு தட்டு உள்ளே போகும்.

என்னென்ன பொருட்கள் தேவை?

அரிசி ரவை – 1 கப்

பருப்பு – கால் கப்

பச்சை மிளகாய் – 2 முதல் 3

தேங்காய் – கால் கப்

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்கத் தேவையானவை என்னென்ன?

எண்ணெய் – 4 ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

உளுந்து – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

அரிசியை ரவையாக்குவது எப்படி?

ஒரு கப் அரிசியை நன்றாக 2 முதல் 3 மணி நேரம் வரை ஊற வைச்சுக்கோங்க. அதை சற்றும் தண்ணீர் இன்றி நல்லா வடித்து வைக்கவும். ஒரு வறட்சியான துண்டில் ஊறவைத்து வடித்த அரிசியை பரப்பிவிட்டு காய வைச்சுக்கோங்க. முக்கால் பதம் காய்ந்ததும், கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும்போதே ரவை பதத்துக்கு மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ளுங்கள். இதை நன்றாக பேப்பரில் காய வைத்து, காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்துவிடுங்கள்.

செய்முறை

துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊறக்கவும்.

அத்துடன், பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பைப் பற்றவைத்து, அதில் கடாயை வைத்து எண்ணெய் சூடாக்கவும்

சூடான எண்ணெயில், கடுகு போட்டு, அது பொறிந்ததும் உளுந்து தாளிக்க வேண்டும்

உளுந்து சிவந்ததும், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர் துவரம் பருப்பு, பச்சை மிளகாய் போட்டு அரைத்த கலவையை சேர்க்கவும்.

தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு, தேங்காய் சேர்க்க வேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும், அரிசி ரவையை சேர்க்கவும்

உப்புமா பதத்தில் வந்தவுடன், கேஸை அணைத்துவிட்டு, ஆறவிடவும்.

நன்றாக ஆறியவுடன் எடுத்து கொழுக்கட்டையைப் போல் பிடித்துக்கொள்ளவும்.

உருண்டையாகவோ, தட்டையாகவோ பிடித்த வடிவில் கொழுக்கட்டை பிடிக்கவும்.

அதை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்

சூடான உப்புமா கொழுக்கட்டை பரிமாற தயாராகிவிட்டது.

சட்னி, சாம்பாருடன் இதை சேர்த்து பரிமாறலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE