மேக்கப் இல்லாம சாய் பல்லவி மாதிரி பளபளன்னு ஆகனுமா?

எத்தன கிரீம் வாங்கி என்ன பலன்? முகம் கழுவுனதும் பழைய கலர் அப்டியே வந்துருதுன்னு வருத்தப்பட்டிருக்கீங்களா? அதுக்கு என்ன காரணம்னா, நீங்க மேக்கப் கிட் வாங்குற காச ஆரோக்யமான பொருட்கள வாங்கி சாப்பிட பயன்படுத்தலன்னு அர்த்தம். ஃபேஸ் பவுடர் கூட வாங்காம, எப்டி பளபளன்னு ஆகுறது அப்டிங்குறத பாக்கலாம்.

பொதுவாக மேனி பளபளவென இருக்கக் காரணம் ஆன்டி- ஆக்ஸிடன்ட்ஸ். இவை, பளிச்சென்ற நிறமுள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் மிகுதியாகக் காணப்படுகிறது. குறிப்பாக மாதுளை, பப்பாளி, எலுமிச்சை, ஸ்ட்ராபெரிகளில் இது நிறைந்துள்ளது.

முட்டைக்கரு, வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கும். குறிப்பாக விட்டமின் டி, இ இவற்றில் நிறைந்துள்ளன.

புரதச்சத்து பற்றாக்குறை வந்தால் சருமம் வறண்டு போகலாம். எனவே, புரோட்டீன் அதிகம் உள்ள உணவு சாப்பிட வேண்டும். முட்டை சாப்பிடாலாம். அதை சாப்பிடாதவர்களுக்கு சோயா பீன்ஸ், பனீர், டோஃபு, சோயா பால் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். முளைக்கட்டிய பயறு வகைகள், பருப்பு வகை உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்.

ஒருநாளில் 400 முதல் 500 கிராம் அளவுக்கு காய், பழங்கள் சாப்பிட வேண்டும்.

அடுத்த வேளை உணவு எடுத்துக்கொள்வதற்கும் இடையே சரியான கால இடைவெளி தேவை

வெயிலில் சென்றுவிட்டு வீடு திரும்பியபின், வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்

தயிர், பாதாம், வால்நட், சோயா, பட்டாணி, பருப்பு வகைகளை சாப்பிடவும்

பழங்கள் சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும். சருமத்துக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் பழங்களில்தான் அதிகம் இருக்கின்றன.

வாழைப்பழத்துடன், வால்நட் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து மில்க் ஷேக் போல் சாப்பிடலாம்

இந்த டயட்டை 3 வாரம் பின்பற்றினாலே சருமத்துக்குப் பொலிவடைவது கண்கூட தெரியும்

கீரையில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், வாரத்தில் 3 நாள்கள் சாப்பிடவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE