3 வயதில் பிரிவு – அப்பா இறந்து 1 வாரமான பின் செய்தி அறிந்து கதறும் ஷெரின்

சேரனை பார்த்து அப்பா ஞாபகம் வருதுமா என பிக் பாஸில் கதறியவர் தான் ஷெரின்.

யார் இவர்?

நடிகை ஷெரின் பெங்களூருவில் பிறந்தார். அவர் 16 வயதில் துள்ளுவதோ இளமை படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதை அடுத்து விசில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவரின் அழகை காணவே திரைப்படங்களை பார்க்க வந்த கூட்டம் ஏராளம்.

இயல்பான நடிப்பால் மக்களைக் கவர்ந்து வந்தவர் திடீரென திரை உலகை விட்டு சற்று விலகி இறந்தார்.

இதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் ஒரு போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது பங்களிப்பு அடிக்கடி இவரை பிரமோவில் இடம்பெற செய்தது.

பிக் பாஸ் வீட்டுக்குள் என்றேனும் ஒரு நாள் வீட்டில் உள்ள உறவுகள் வந்து சந்திக்கும் நாள் என்று ஒன்று வரும். அந்த நேரத்தில் தனது தாயை சந்தித்திருந்தார் ஷெரின். அப்போது கூட இயக்குனரும் நடிகருமான சேரனை பார்க்கும்போது எனக்கு அப்பா நினைப்பு வருகிறது, எனக்கு அப்பா வேண்டும், என்று தனது தாயை கட்டி அணைத்துக் கொண்டு அழுதார் ஷெரின்.

அப்பா ஏக்கம் ஏன்?

ஷெரின் தாயும் தந்தையும் ஷெரினுக்கு 3 வயதாக இருக்கும் போதே ஒரு சில காரணங்களால் பிரிந்து விட்டனர்.

இதனால் சிறு வயதிலிருந்தே அப்பாவுக்கான ஏக்கம் ஷெரினுக்கு இருந்தது.

அவரும் அவரை அதன் பின்பு பார்க்கவே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

குடும்ப புகைப்படம் மட்டுமே அவரிடம் இருந்ததாகவும் அதில் ஒரு புகைப்படத்தில் தந்தை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஷெரின், “நீங்கள் இறந்து ஒரு வாரம் ஆன பின்பு தான் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. என்னிடம் இருக்கும் ஒரே புகைப்படம் இதுதான். இது இனி என்னிடம் எப்போதுமே இருக்கும். மிஸ் யூ பா.” என்று பதிவிட்டுள்ளார்.

ஷெரின் பதிவிட்ட இந்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

திருமண வாழ்வில் பிரிவைத் தேர்ந்தெடுக்கும் தம்பதிகள் தங்களது குழந்தையின் ஏக்கத்தை கருத்தில் கொள்வதில்லை என்று பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

கவுன்சிலிங்

தனிப்பட்ட வாழ்க்கை திருமண வாழ்க்கை மனநலம் மருத்துவ நலம் என எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் முடிவெடுக்க தடுமாறும் சூழலில் 104 என்ற எண்ணில் அரசின் இலவச ஆலோசனை மையம் செயல்படுகிறது. அதனைத் தொடர்பு கொண்டு உங்களுக்குரிய பிரச்சினைகள் குறித்து பேசி தீர்வு காணலாம்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE