உலகிலேயே ஒரு நிறத்தை திருமணம் செய்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் கிட்டன் கே செரா.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடைபெற்றது/ இதில் திருமணத்தின் தீமும் அதே பிங்க் தான். அதாவது பிங்க் நிறம் உள்ள 5 ஷேடுகளின் பேலட்ட அவர் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில் அவருக்கு அணிவிக்கப்பட்ட வைர மோதிரமும் பிங்க் நிறத்தில் தான் இருந்தது. 40 வயதான கிட்டன் கே செராவுக்கு பிங்க் நிறம் என்றால் உயிர். அவர் இன்ஸ்டாகிராமில் தனியாக ஒரு கணக்கை தொடங்கி தனது வீடு முழுக்க பிங்க் நிறமாக இருப்பதை அவ்வப்போது பதிவிட்டு வருவார்.

“பிங்க் ஏன் உங்களுக்கு அவ்வளவு பிடிக்கும்? என பலரும் கேள்வி எழுப்பியநிலையில் அதற்கான பதிலை வீடியோக்கள் மூலம் அவர் கூறியிருந்தார். இதே கேள்வியை தெருவில் ஸ்கேட்டிங் ஓட்டிச் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் “உங்களுக்கு ஏன் பிங்க் பிடிக்கிறது? என்று கேட்டுள்ளார்.

“ஐ லவ் பிங்க்” என்று சொன்னதும், அப்படியானால் திருமணம் செய்து கொள்வீர்களா? என அந்த சிறுவனும் விளையாட்டாக கேட்டுள்ளார். இதனை சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டார் கிட்டன் கே ரெசா. அவர் பின் பிங்க் நிறத்தையே திருமணமும் செய்து கொண்டார்.

ஒரு தேவாலயத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு வந்திருந்த அனைத்து நண்பர்கள் உறவினர்கள் அனைவருமே பிங்க் நிறத்தில் தான் உடை அணிந்து வந்தனர். அவர் பிங்க் நிற காரில் தான் இறங்கி வந்தார். பிங்க் பலூன்கள், பிங்க் அலங்கார பொருட்கள், பிங்க் மலர்கள், பிங்க் கேக், என அனைத்துமே பிங்க்தான்.

இவ்வளவு ஏன் திருமணத்திற்கு என வாங்கப்பட்ட வைர மோதிரமும் பிங்க் நிறத்தில் தான் இருந்தன. கிட்டன் கேசாராவின் செல்ல பிராணியான பொமரேனியன் நாய் குட்டி கூட பிங்க் நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது. சிறுவயதில் இருந்தே தனக்கு பிங்க் என்றால் பிடிக்கும் என்றும் எனவே அதையே திருமணம் செய்து கொண்டது தனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார். மேலும் தான் பிங்கை டிவர்ஸ் செய்ய வாய்ப்பே இல்லை என்பதால் வாழ்நாள் முழுவதும் இணைபிரியாது வாழ்வேன் என்றும் பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE