பொதுவாக IIT, IIM உள்ளிட்ட நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் மிகவும் திறமைசாலிகளாக பார்க்கப்படுவார்கள். அந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்போர்களுக்கு வெளிநாடுகளில் கூட கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும். நீ, நான் எனப் போட்டி போட்டுக் கொண்டு அவர்களை அதிக சம்பளம் கொடுத்து பணிக்கு எடுத்துக் கொள்வர்.

ஆனால் IIT, IIM ஆகியவற்றில் படிக்காமல் அலகாபாத் IIIT அதாவது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் படித்த பாலக் மிட்டல் என்ற பி.டெக் மாணவி தனது கல்வி நிறுவனத்தின் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் விதமாக ரூ.1 கோடி சம்பளத்தில் அமேசானில் சம்பளத்தில் சேர்ந்துள்ளார்.

தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய சம்பளத்தொகையாக இது பார்க்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமேசான் வெப் சர்வீசஸ் என்ற நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பராக பெர்லினில் பணியில் சேர்ந்தார் பாலக் மிட்டல். தற்போது பெங்களூருவில் உள்ள “ஃபோன் பே” என்ற அலுவலகத்தில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

ஒரு திறமையான சாஃப்ட்வேர் டெவலபராக வலம் வரும் பாலக் மிட்டல் சர்வர் இல்லாத தொழில்நுட்பங்களை பின்பற்றி அதற்கான கோடிங்கை உள்கட்டமைப்பு செய்யும் திறமைசாலியாக இருக்கிறார். கிளவுட் செயல்பாடுகளிலும் அசத்தி வருகிறார். ப்ரோக்ராம் மொழிகளான AWS LAMBDA, AWS S3, AWS Cloudwatch, Typescript, Java, SQL ஆகியவற்றில் கை தேர்ந்தவராக இருக்கிறார்.

ப்ராஜெக்ட்டுக்கு முழு உரிமையாளராக இருப்பது சாஃப்ட்வேர் காம்பொனென்ட்களை டிசைன் செய்வது, டேட்டா மாடலிங், அனாலிசிஸ் உள்ளிட்டவற்றிலும் சிறந்து விளங்குகிறார் பாலக் மிட்டல்

இவர் மட்டுமில்லாமல் அதே IIIT அலகாபாத்தில் உடன் படித்த அனுராக் மகே என்பவர் கூகுளில் ரூ.1.25 கோடி சம்பளத்திலும், அகில் சிங் என்பவர் ரூ.1.20 கோடி சம்பளத்தில் ரூப்ரிக்கிலும் பணியில் சேர்ந்துள்ளனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE