வாழ்க்கையில் வேறு திசையில் செல்ல வேண்டிய நிலை வந்து விட்டது – செரீனா வில்லியம்ஸ்

வாழ்க்கையில் வேறு திசையில் செல்ல வேண்டிய நிலை வந்து விட்டது – செரீனா வில்லியம்ஸ் : 

டென்னீஸ் உலகில்  தனது  ஆக்ரோஷமான ஆட்டங்களால் 23 கிராண்ட்ஸ்சிலாம் பட்டங்களுடன் கொடிகட்டி இருப்பவர் தான் 41 வயதான செரீனா வில்லியம்ஸ். அமெரிக்கானவின் முன்னணி டென்னீஸ் வீராங்கனையான இவர், தான் மிகவும் காதலித்த டென்னீஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக  அறிவித்துள்ளார். இந்த தகவல்கள் vogue  செப்டம்பர் மாத இதழில் வெளியாகி உள்ளது. ஓய்வு அறிவுப்புக்கான பல்வேறு காரணங்களையும் மிகவும் உருக்கமாக அவர் பகிர்ந்துள்ளார்.  

“வாழ்க்கையில் அனைவருக்கும் எப்போதாவது வேறு திசையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் “. நானும் அந்த மாதிரியான கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். எனது வாழ்க்கையில் நான் அதிகம் நேசிப்பது டென்னீஸ் விளையாட்டும், குடும்பமும்.  ஆனால் இரண்டையும் ஒரே கையில் வைத்துக்கொள்ள முடியாது. ஒன்றை விட்டுக்கொடுத்து, மற்றொன்றை இருக்கமாக பற்றிக் கொள்ள வேண்டும். அப்படிப்பார்த்தால், ஒரு தாயாக இருந்து எனது குடும்பத்தையும், எனது 5 வயது குழந்தையுடனும் வரும் நாட்களை செலவிட விரும்புகிறேன் என்று vogue இதழில் செரீனா தெரிவித்துள்ளார். 

மேலும், ஒரு ஆணாக பிறந்திருந்தால் நிச்சயம் ஓய்வு என்ற நிலை எனக்கு வந்திருக்காது. ஏனென்றால் என் மனைவி எங்கள் குடும்பத்தை பராமரிக்கும் வேலை செய்து கொண்டிருப்பார். நான் டாம் பிராடியைப் போல் விளையாடி வெற்றி பெற்றிருப்பேன் என்றார். செரீனா வில்லியம்ஸ் வோக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஓய்வு பற்றி தெரிவித்திருந்தாலும், அதிகார பூர்வமான தேதியை அவர் குறிப்பிடவில்லை. இவை அனைத்துமே, அவர் மற்றொரு குழந்தையைப் பெறுவதைப் பொறத்த்து தான். ஒரு தடகள வீரராக நான் நிச்சயமாக மீண்டும் கர்ப்பமாக இருக்க விரும்பவில்லை.நான் டென்னிஸில் இன்னும் வெற்றிகளைப் பெற விரும்புகிறேன். ஆனால் தாயாக என் கடமைகளையும் செய்யவேண்டி உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு விம்பிள்டனை வெல்ல நான் தயாராக இல்லை.  நியூயார்க் ஒப்பனை  வெல்லத் தயாராக இருப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் முயற்சிக்கிறேன் என்று பேட்டியில் குறிப்பிட்டார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு “ செரீனா வென்ச்சர்ஸ் “ என்ற நிறுவனத்தை தொடங்கி இருந்த செரீனா, இனி விளையாட்டை தவிர்த்து குடும்பத்தையும், கம்பெனி வளர்ச்சியில் மட்டும் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறினார்.

செரீனாவின் சாதனைகள் : 

டென்னிஸ் விளையாட்டில் செரீனா வில்லியம்ஸ் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக இவர் 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார்.  அத்துடன் 14 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 2 கலப்பு இரட்டையர் பிரிவிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார். இவை தவிர மகளிர் டபிள்யூடிஏ 73 ஒற்றையர் பட்டங்களையும், 23 இரட்டையர் பிரிவு பட்டங்களையும் வென்று அசத்தியுள்ளார். இவற்றுடன் சேர்ந்து 4 ஒலிம்பிக் பதக்கங்களையும் வென்றுள்ளார். இவருடைய நீண்ட நெடிய டென்னிஸ் வாழ்க்கையில் 319 வாரங்கள் சர்வதேச வீராங்கனை பட்டியலில் முதல் இடத்தில் இருந்து சாதனைப் படைத்தார். 

செரீனா வில்லியம்ஸ் கடைசியாக 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் இவர் எந்த ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றதில்லை.  கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இவர் முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இந்தச் சூழலில் கடைசியாக யுஎஸ் ஓபன் தொடரில் பங்கேற்க உள்ளார்.

Facebook
Instagram
YOUTUBE