துணியைக் கழற்றி வெளியே அனுப்பி கொடுமை – எம்எல்ஏ மருமகள் மீது இளம்பெண் குற்றச்சாட்டு
“இல்லாத நாய் நீ, நான் எம்எல்ஏ மருமகள், நீ எவன்கிட்ட போய் சொன்னாலும், நான் எம்எல்ஏ மருமகள்- ன்னு தெரிஞ்சா பொத்திக்கிட்டு போயிருவாங்க” கொடூரங்களின் குற்றச்சாட்டுக்களை சிறுபிள்ளை போல் தேம்பித் தேம்பி அழுது கூறிய வார்த்தைகள்தான் இது. கேட்போரின் நெஞ்சைப் பிழிந்திடும் கொடூரங்களை பட்டியலிட்டுள்ளது த காரிகை.
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மெர்லின் ஆண்ட்ரூஸ் மதிவாணன் மீது அடுக்கடுக்கான பகீர் குற்றச்சாட்டுக்களை அவரது வீட்டில் பணிபுரிந்த 18 வயதே ஆன இளம் பணிப்பெண் சுமத்தியுள்ளார்.
எம்எல்ஏ கருணாநிதி மருமகள் மெர்லின் மீதான குற்றச்சாட்டுக்கள்
- காலை 6 மணி முதல் இரவு 2 மணி வரை வேலை
- மறுநாள் காலை 6 மணிக்கு எழுந்து சமைக்காததற்கு சித்ரவதை
- ஹேர் டிரையரைக் கொண்டு சூடு வைத்தது
- நியூஸ் பேப்பரைப் பற்றவைத்து எரியும் தீயை வாயில் வைத்தது
- குழம்புக் கரண்டியால் வாயில் அடித்து ரத்தம் வர வைத்தது
- வலியும் ரத்ததைத் துடைத்து முகத்தை கழுவச் சொல்லிவிட்டு மீண்டும் அடித்தது
- மார்பகங்களில் அடித்து கொடுமைப்படுத்தியது
- ஒரு வேலையை முடிக்கும் முன் பல வேலைகளைக் கொடுத்து எதையும் முடிக்கவில்லை என அடிப்பது
- மாப் போடவில்லை என காலை முதல் துரத்தி துரத்தி நீண்ட நேரம் அடித்து கொடுமை
- மிளகாய்த் தூளை கரைத்து குடிக்கச் செய்தது
- வயிறு வாயெல்லாம் எரிச்சலெடுத்து, படுத்து உருண்டபோதும் தண்ணீர் கூட கொடுக்காதது
- ஆடைகளைக் கழற்றி வெளியில் நிற்க வைத்தது
- இல்லாத நாய் நீ, நான் எம்எல்ஏ மருமகள் நான் என ஆபாச வார்த்தைகளைப் பேசியது
- மிரட்டல்களின் பேரில் பணியவைத்து 7 மாதமாக சம்பளம் தராமல் கொடுமைப்படுத்தியது
- போகும்போதும், வரும்போதும், போரடிக்கும்போதெல்லாம் கன்னத்தில் அறைவது.
- சிகரெட் உள்ளிட்டவற்றால் சூடு வைத்தது
- காயங்களுக்கு மருந்து வாங்கித்தரவில்லை.
- மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.
- தலையில் வீங்கியிருந்தபோதும் ஐஸ்கட்டி வைக்க மட்டுமே சொன்னார்
கொடுமை வெளியே வராதிருக்கக் காரணங்கள்
இவை அனைத்தையும் வெளியே கூறினால் குடும்பத்தினரைக் கொன்றுவிடுவேன் என மிரட்டியது
கருவுற்று கலைத்திருப்பதாகக் கூறி போலி மருத்துவச் சான்று தயாரித்து மானத்தை வாங்கி, உனது ஊரில் உள்ளோரிடம் வதந்தி பரப்பி விடுவேன் என மிரட்டியது.
இத்தனை கொடுமைகளையும் அந்த பெண் கூறியதை அடுத்து சம்பந்தப்பட்டவர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.