பெண்கள் பொதுவாக அனைத்து மாதங்களிலும் கோலம் போட்டாலும் மார்கழி மாதத்தில் கோலம் போடுவது என்பது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதில் பல அறிவியல் பூர்வமான உண்மைகளும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்று கூறுவது உண்டு. நமக்கு தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை அவர்களுக்கு ஒரு பகல் பொழுதாக இருக்கும். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரை தேவர்களுக்கு அங்கு இரவாக அமையும்.

அப்படி கணக்கிட்டு பார்க்கும்போது தேவலோகத்தில் பிரம்ம முகூர்த்த நேரம் தான் பூமியில் மார்கழி மாதமாக வருகிறது.

எனவே அந்த மாதத்தில் விடியற்காலை எழுந்து, குளித்து, அரிசி மாவில் கோலமிட்டு, சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து, பூசணிப்பூ செம்பருத்தி பூ, பரங்கிப் பூ ஆகியவற்றை வைத்து வழிபட்டு விளக்கேற்றி அந்த நாளை தொடங்குவார்கள்.

இவை அனைத்துமே ஒரு இயற்கை இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகாலையில் எழுந்து கை கால்களை வளைத்து இடுப்பை குனிந்து வாசல் தெளித்து கோலம் போடும்போது உடற்பயிற்சி போன்று அமையும்.

அந்த நேரத்தில் நிலவும் இருப்பதால் ஒரு குளிர்ச்சி நிலவும்.

அதிகாலை வேளையில் மாசற்ற நல்ல காற்று சுவாசிக்க கிடைக்கும்.

பித்ருக்கள் வீட்டுக்குள் வருவதற்கு ஏதுவாக அமாவாசை மற்றும் சிரார்த்த தினங்களில் கோலம் இடுவது இல்லை.

எனவே தான் கோலங்கள் தீய சக்திகளை தடுக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

யாராவது வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தால் அதற்கு முன்பாகவே வாசல் தெளித்து கோலம் போடுவதற்கும் இதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

கோலம் என்பது ஒரு ஜியோமெட்ரி டேட்டா ஆகும்.

புள்ளி வைத்து கோடுகளை இணைத்து வளைத்து நெளித்து கோலம் போடும்போது நினைவாற்றல் அதிகரிக்கும்.

அந்த கோலத்தை அழகாக இருக்கிறது யாரேனும் கூறினால் உற்சாகமும் தனித்திறமையை வளர்க்கும் பண்புகளும் அதிகரிக்கும்.

வீட்டை விட்டு வெளியே செல்பவர்களுக்கும், வீட்டுக்குள் வருபவர்களுக்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாக கோலம் வரவேற்கும். கவலைகளை களையச் செய்யும்.

மன உறுதிப்பாடு இருந்தால் தான் புள்ளிகளை சரியாக இணைத்து கோலம் போட முடியும்.

மார்கழி மாதத்தில் அதிகாலை நேரம் பனிக்கு பயந்து இரவிலேயே சிலர் கோலம் போட்டுவிட்டு உறங்கி விடுவார்கள்.

ஆனால் இது தவறு. மார்கழி மாதத்தில் இரவில் வரும் பனியின் அடர்த்தி தன்மையை விட அதிகாலை வரும் பணியின் அடர்த்தி தன்மை குறைவாக இருக்கும் என்பதால் இது உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தாது.

பொதுவாக சூரியன் உதிக்கும் முன்பாக வாசல் தெளித்து கோலமிடுவது வழக்கம்.

சாணத்தின் மீது வைக்கப்படும் பூசணிப்பூ, பரங்கிப் பூ உள்ளிட்டற்றவற்றின் மனம் காற்றில் பரவி கிருமி நாசினியாக திகழும் என்று நம்பப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE