சவுதியில் இனி பெண்கள் தியேட்டருக்கு போகலாம்
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா அதன் பாரம்பரியத்திலும் பணக்காரத் தன்மை கொண்டது.
கலாச்சாரத்தை பின்பற்றுவதில் சவுதி அரேபியா முன்னணியில் வகிக்கும். குறிப்பாக ஆண் பெண் பாகு பாடு அங்கு அதிகம் இருக்கும். பெண்கள் தனியாக விமானத்தில் பயணம் செய்வது உள்ளிட்ட தடைகளையே தற்போதைய பட்டத்து அரசர் முகமது பின் சல்மான் தான் நீக்கினார். இவர் முன்னோர் போன்றல்லாமல் முன்னோட்டத்தோடு சிந்திக்கும் திறமை கொண்டவர். அதுமட்டுமின்றி பெண்கள் இனி கால்பந்தாட்டத்தை ரசிக்க செல்லலாம். அவர்கள் கார் ஓட்டலாம். ஆண் துணை இன்றி தனியே வெளியே சென்று வரலாம். உள்ளிட்ட தடைகளை நீக்கி பாலின சமத்துவத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார். 2030 ஆம் ஆண்டுக்குள் சவுதி அரேபியாவை சிறப்பான ஒரு கலாச்சாரமிக்க அதேசமயம் நவீனமயமான ஒரு தேசம் ஆக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது ரியாத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் 300 திரையரங்குகள் கட்டப்பட உள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே மக்கள் பெரிய திரையின் அனுபவத்தை காண வகை செய்யும் ஒரு முயற்சியாக பிளாக் பாந்தர் திரைப்படம் சவுதியில் ஒளிபரப்பப்பட்டது.
அந்த வகையில் தற்போது பெண்கள் சினிமாவுக்கு அதுவும் தியேட்டருக்கு சென்று காணலாம் என்று சவுதி அரேபியா மன்னர் அறிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் எலக்ட்ரானிக் பாடலுக்கு நடனம் ஆடலாம். பொது இடத்தில் ஆண்களுடன் பேசலாம் என்றும் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இஸ்லாமிய மத காவல்துறை நீக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தங்கள் நாட்டில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தினர் மது அருந்து அனுமதிக்கப்பட்டிருந்தது.
இது சாதாரண விஷயம் தானே என பலரும் நினைக்கலாம். ஆனால், கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சவுதி அரேபியாவில் இது மிகப்பெரிய விஷயம்.
பெண்கள் வெளியே நடமாட அனுமதிப்பது, அவர்கள் மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வது உள்ளிட்ட பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி அவர் காய் நகர்த்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.