மக்களுக்கு கொரோனா காலத்தில் தனக்கு வந்திருக்கும் மெடிக்கல் ரிப்போர்ட்களை கூகுளில் தேடித் தேடி, பல பேர் தங்களைப் பாதி மருத்துவர்களாகவே நினைத்து அடுத்தவர்களுக்கு அட்வைஸ் கொடுத்து வருவார்கள்.

அந்த வகையில் அவர்கள் கேன்சரைப் பற்றி அதிகம் தேடினால், கேன்சர் பற்றிய செய்திகளே கண்ணில் படும். அப்படியாக நீங்களும் இந்த செய்தியைக் கண்டறிந்தீர்கள் என்றால், புதுவகையான கேன்சரைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

உலகளவில் 100-க்கும் மேற்பட்ட வகையான கேன்சர்கள் உள்ளன. அவற்றில், பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், ஓவரீஸ் கேன்சர், வேஜினல் கேன்சர் உள்ளிட்டவை வரலாம். அதேபோல் ஆண்களுக்கு இணையான பல பொது உறுப்புக்கள் உள்ளிட்ட இதயம், கல்லீரல், நுரையீரல் ஆகிய பகுதிகளிலும் கூட சில பெண்களுக்கு கேன்சர் வரும்.

அதில் தற்போத பெண்களுக்கு என்ற பட்டியலில் புதியதாக இணைந்துள்ளது புடவை கேன்சர். இது ஏதோ புடவை வாங்கும் பழக்கத்தாலோ, புடவையில் உள்ள கெமிக்கலின் காரணமாகவோ வரவில்லை.

ஆனால், புடவை அணியும் விதத்தால் வருகிறது. புடவை கட்டும் பெண்கள் அந்தப் புடவைக்கு அஸ்திவாரமாக அமையும் பாவாடையை இறுக்கமாகக் கட்டுகின்றனர். இதன் காரணமாக அந்த இடத்தில் ரத்தம் ஓட்டம் பாதித்து தோளின் நிறமும் காலப்போக்கில் கருப்பாகவும், சிலருக்கு நீலம் அல்லது பச்சையாகவும் மாறிவிடும்.

இதில் புற்றுநோயை வளர்க்கக்கூடிய ரசாயனக்கலவைகளின் மாற்றத்தால் புடவை கேன்சர் வருகிறதாம். அதிலும் பெரும்பாலும் புடவையை தினம்தோறும் அணியும் பெண்கள் இத்தகைய புற்றுநோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாம்.

டெல்லியில் உள்ள பி.எஸ்.ஆர்.ஐ. மருத்துவமனையின் புற்றுநோயியல் துறை அறுவை சிகிச்சை மருத்துவர் விவேக் குப்தா இதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

புடவைக்கு அணியும் பாவாடையை பல நாட்கள் துவைக்காமல் பயன்படுத்தும் போது இந்த வகையான கேன்சர் வர வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி உள்ளாடைகளையும் அடிக்கடி துவைக்காமல் திரும்பத் திரும்ப அணியும் போது அசுத்தம் காரணமாக பல்வேறு தோல் நோய்களும் வரும் என்றும் அது புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார். ஆடைகள் அனுதினமும் மாற்றி, சுத்தமாகத் துவைத்துத்தான் அணியவேண்டும் என்ற சுய சுகாதார விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.

இது புடவை மட்டுமின்றி இறுக்கமாக அணியும், சுடிதார் பேண்ட், வேட்டி ஆகியவற்றுக்கும் அசுத்தமில்லாது இருக்கும்போது இந்த அறிவுறுத்தல் பொருந்தும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE