“சரத்தை விவாகரத்து பண்ணியிருக்கக் கூடாதோ” புலம்பும் வரலட்சுமியின் அம்மா?

நடிகர் சரத்குமார் தனது சொந்த ஊரில் வரசித்தி விநாயகர் கோவிலையும், தனது குலதெய்வமான காமாட்சியம்மன் கோவிலையும் கட்டியுள்ளார். இக்கோவிலில் தனது மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி மற்றும் பிள்ளைகளுடன் கோலாகலமாக கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார்.

அத்துடன், தனது சொந்த பந்தம், பங்காளிகள், ஊர் பெரியவர்கள் உள்ளிட்ட விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி கூறியிருந்தார். குடும்பத்தோடு மகிழ்ந்து கொண்டாடிய விழாவாக இது அமைந்தது. இந்தநிலையில்தான், அவரது முதல் மனைவியும், நடிகை வரலட்சுமி சரத்குமாரின் தாயாருமான சாயா பேசியதாகக் கூறப்படும் பழைய பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் திருமணம் செய்து கொள்வதற்கு வயது இதுதான் என்று குறிப்பிட்டு எதுவும் சொல்ல முடியாது என அவர் பேசியுள்ளார். “திருமணம் என்றாலே இதற்காகத்தான் என தப்பான அர்த்தம் உள்ளது. திருமணத்துக்கு முதலில் நாம் மனதளவில்தான் தயாராக வேண்டும். எதற்காக திருமணம் செய்யப் போகிறீர்கள் என்பதற்கு சரியான காரணங்கள் வேண்டும்.

எமோஷனல், மனதளவு, உடலளவில் தயாராகிறிருக்க வேண்டும். திருமணம் என்பது ஒருநாள் கூத்து இல்லை. அது ஒரு பயணம். அதில் பயணிக்க எல்லாத் தளங்களிலும் உயர்ந்த நிலை வேண்டும். வெறும் உடல் தேவை மட்டும் கூடாது. அது திருமணத்தில் ஒரு சிறிய பங்கு தான். ஆனால் அதையும் தாண்டி நீங்கள் மனதளவில் திருமணத்திற்கு தயாராக வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

தவறான காரணங்களுக்காக திருமணம் செய்தால், அது முடிவுக்கு வர அதிக வாய்ப்பு உண்டு. அதுபோல அந்த திருமணத்தால் உங்களுக்கு குழந்தைகள் இருப்பின் அது இன்னும் மோசமாக மாறும். அதனால் விவாகரத்து முடிவை எடுக்கும் முன்பு நன்றாக யோசியுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், எப்பேர்பட்ட சூழலாக இருந்தாலும் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் என்பது மிக மிக முக்கியம்.
அதை எப்போது ஒரு ஆணால் கொடுக்க முடிகிறதோ அப்போது திருமணம் செய்யலாம். திருமணத்தில் எதிர்பார்ப்பு இருந்தால் சந்தோஷமாக வாழ முடியாது. சின்ன சின்ன விஷயங்களைக் கூட செய்ய முடியாது என்றால் நீங்கள் தனித்து மகிழ்ச்சியாக வாழ்வதே நல்லது என்று அவர் கூறியிருக்கிறார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE