நடிகை சனா கான் லண்டனில் கைக்குழந்தையோடு கஷ்டப்பட்டதை தனது விலாக்கில் பகிர்ந்துள்ளார். சவுதி அரேபியாவில் இருந்து லண்டனுக்கு திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக நடிகை சனா கான், கைக்குழந்தையோடு கணவனுடன் சென்றார்.

அவர்க்ளது விமானம் 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. இதையடுத்து தனது குழந்தையின் முதல் விமான அனுபவம் என தனது வீடியோவைப் பதிவாக்கத் தொடங்கினார். லண்டன் சென்று இறங்கியதுமே அவர்களது லக்கேஜ் விமான நிலையத்தில் இருந்து கிடைக்காமல் போனது. நீண்ட நேரம் காத்திருந்த அவர்கள் அங்கிருந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துப் புறப்பட்டனர். லக்கேஜ் கிடைக்கவில்லை என்பதால் அங்கேயே காத்திருந்தனர்.

விமான நிலைய நிர்வாகத்துடன் பலமுறை பேசியும் லக்கேஜ் எங்குள்ளது? என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. எனவே அவர்கள் மறுநாளும் அதே ஆடையை அணிந்தபடி வலம் வந்தனர். அடுத்த நாளும் லக்கேஜ் கிடைக்கப் பெறாததால் அவதியடைந்தனர்.

நல்வாய்ப்பாக குழந்தைக்குத் தேவையான எக்ஸ்ட்ரா டயாபரை தனது ஹேன்ட் பேக்கில் வைத்திருந்ததால் தப்பித்ததாகக் கூறினார். எனவே தாங்களும் குழந்தையோடு பயணப்படும்போது, மிகவும் அத்யாவசியமான பொருட்களை டயாபர் பேகில் வைத்து எடுத்துச் செல்வது நல்லது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதேபோல் 3-வது நாளும் லக்கேஜ் கிடைக்காததால் தனது தோழியிடம் இருந்து இரவல் வாங்கி அபயாஸ் என்ற இஸ்லாமியர்களின் மேலங்கி அணிந்ததாகக் கூறினார். குழந்தைக்குத் தேவையான சின்னச் சின்னப் பொருட்களைக் கூட கடைகளில் இருந்துதான் வாங்கிப் பயன்படுத்துவதாகவும் சனா கான் குறிப்பிட்டார்.

மறுநாள் 4-வது நாளில் தாங்கள் மணமக்களுக்கு வாங்கிய, இனிப்புப் பலகாரங்கள், பரிசுகள் எல்லாம் இந்நேரம் பாழாய் போயிருக்கும் என வருத்தப்பட்டார். இனி லக்கேஜ் கிடைத்தாலும் கூட தன்னால், அந்தப் பரிசை மணமக்களுக்குக் கொடுக்க முடியாது எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

5 மற்றும் 6-வது நாளிலும் உடைகள், உடமைகள் கிடைக்காமல் கஷ்டப்பட்ட சனாகான், 7-வது நாள் சவுதி அரேபியாகவுக்கே திரும்பிவிட்டதாகவும், அப்போதுதான் தங்களது உடமை கிடைத்துவிட்டதாக தகவல் வந்ததாகவும் குறிப்பிட்டார்.

இனி கிடைத்து என்ன பயன்? ஒரு குழந்தையை அழைத்துச் செல்லும் தாய் அதில் எத்தனை எத்தனை பயனுள்ள பொருட்களை எடுத்து வைத்திருப்பார்? என்ற பொறுப்பை விமான நிலைய ஊழியர்கள் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் சனா கானின் லண்டன் பயணம் அமைந்துள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE