சமந்தா தான் மருமகள், சோபிதா புடிக்கல; புலம்பும் நாக சைதன்யாவின் தாய்
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்ததில் இருந்தே ஏற்பட்ட காதல் ஆனது 2017 ல் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் திருமணம் ஆக முடிந்தது.
கோவாவில் பல பிரபலங்களும் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட திருமணம் நடைபெற்றது.
சமந்தாவின் மாமியார் யார்?
தெலுங்கு திரை உலகில் பவர்ஃபுல் குடும்பமாக இருக்கும் நாகார்ஜுனாவின் மூத்த மகன்தான் நாக சைதன்யா.
ஆனால், அவர் நாகார்ஜுனாவுக்கும் அமலாவுக்கும் பிறக்கவில்லை.
நாகார்ஜுனாவின் முதல் மனைவி லட்சுமிக்கு பிறந்தவர்.
லட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு, நாகார்ஜுனா அமலாவை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு அகில் என்று ஒரு மகனும் உள்ளார்.
விவாகரத்து காரணங்கள்
திருமணத்துக்கு பின்பும் நடிகை சமந்தா திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தது நாகார்ஜுனாவின் குடும்பத்திற்கு பிடிக்காவிட்டாலும் நாக சைதன்யாவுக்காக அவர்கள் பொறுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
அதிலும் சில கவர்ச்சியான பாடல்களில் நடிகை சமந்தா நடித்தது அவர்களது குடும்பத்துக்கு உற்றார் உறவினர் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாகவும், இதனால் ஏற்பட்ட சண்டைகள் காரணமாக நாகசைதன்யாவும் சமந்தாவும் பிரிந்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.
குழந்தைக்கு மறுத்தாரா சமந்தா?
குழந்தை பெற்றுக் கொள்வதை சமந்தா தாமதப்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டும் சொல்லப்பட்ட நிலையில், படப்பிடிப்புகளை சீக்கிரம் முடிக்குமாறும் தனக்கு குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்வில் செட்டிலாக வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் நடிகை சமந்தா, பெண் தயாரிப்பாளர் ஒருவரிடம் விவாகரத்துக்கு முன்னதாகவே குழந்தை பற்றிய ஆசையாக பேசியதாகவும் சமீபத்தில் தகவலாக வெளியானது.
சோபிதாவுடன் நிச்சயதார்த்தம்
சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு நடிகை சமந்தா சிங்கிளாக வசித்து வருகிறார். நாகசைதன்யா நடிகை சோபிதா என்பவரை காதலித்து தற்போது நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்.
இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் திருமண நிச்சயதார்த்தத்துக்கு வராதது குறித்து நாகசைதன்யாவின் தாயும் நாகார்ஜுனாவின் முதல் மனைவியுமான லக்ஷ்மி மனம் திறந்து பேசி இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மருமகள்னா சமந்தா தான் – மாமியார்
அதில் அவர் பேசியதாவது, “மருமகள் என்றால் அது சமந்தா தான். மிகவும் தங்கமானவர். நாகார்ஜுனாவின் வளர்ப்பில் இருந்ததால் நாகசைதன்யாவும் 2வது திருமணம் செய்து கொள்கிறார். எனக்கு விவாகரத்தின் வலி புரியும்.
இதனால்தான் எனக்கு சோபிதாவை நாகசைதன்யா திருமணம் செய்து கொள்வது பிடிக்கவில்லை. எனவே தான் நான் திருமண நிச்சயதார்த்தத்துக்கு வரவில்லை”
என்று பேசியதாக சொல்லப்படுகிறது.
நம் பல்லாவரத்து பெண்ணின் அருமை அவரது மாமியாருக்கு புரிந்தது பற்றி உங்களது கருத்து என்ன என்பதை கமெண்டில் தெரிவிக்கவும்.