நடக்குறதபாத்து வீட்டுக்குள்ள முடங்காம, தைரியமா எப்டி பயணிக்கனும்னு பாருங்க
தற்போது பெண்களுக்கும் – பெண் குழந்தைகளுக்கும் நடக்கும் கொடூரங்களைப் பார்த்தால் வீட்டுக்குள் பெண்ணை பூட்டி வைத்துத்தான் இருக்க வேண்டுமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
பல உலக நாடுகளிலும் பாதுகாப்பாக சுற்றி வந்த பைக் விலாக்கிங் செய்யும் பெண், இந்தியாவில் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டார்.
பாண்டிச்சேரியில் 9 வயது சிறுமியும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இது அதிர்வலைகளையும் பெண்களின் பாதுகாப்புக்கான முக்கியத்துவத்தையும் எழுப்பியுள்ளது.
பெண்கள் தனியாகவோ, பெண் குழந்தைகளுடனோ பயணிக்க வேண்டுமெனில் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
பெண்கள் அதிக எடையில்லாது, எளிதில் தப்பக் கூடிய இலகுவான சுமைகளை பிரயாணத்தில் எடுத்துச் செல்லலாம்.
சந்தேகத்துக்கு இடமான தருணங்களில் தாங்கள் பயணிக்கும் வாகனத்தின் எண்ணை புகைப்படம் எடுத்து அப்பா, அம்மா, அக்கா, அண்ணா, கணவர், நண்பர் உள்ளிட்ட யாருக்கேனும் அனுப்பி வைக்கலாம்.
வாட்ஸ் ஆப் உள்ளிட்ட தலங்களில் தங்களுடைய லைவ் வொகேஷனை அனுப்பி வைக்கலாம்.
சந்தேகத்துக்கு இடமாக ஏதும் நடப்பதாக தெரிந்தால் அதை வீடியோ எடுத்தோ, அல்லது சமூக வலைதள லைவ் மூலமாகவோ பிரச்னையை தெரிவிக்கலாம்.
உள்ளூர் காவல்நிலையங்களின் எண்களையோ, காவலர்களின் எண்களையோ வைத்திருக்கலாம்.
பின்னூசி, கையடக்கக் மடக்கும் கத்தி, பெப்பர் ஸ்பிரே, விசில், ஃபிளேஷ் லைட் உள்ளிட்டவற்றை தற்காப்புக்கு வைத்துக் கொள்ளலாம்.
உள்ளூர்களில் வசிக்கும் சக பெண்களிடமோ, அல்லது தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமோ, நடந்ததைக் கூறி உதவி கோரலாம்.
யாரேனும் பின் தொடர்வதாகத் தெரிந்தால், சுதாரிப்பது நல்லது.
பயணங்களின் போதும், நடந்து செல்லும்போதும் பாடல் கேட்கும் இயர்போன்களை மாட்டியிருந்தால்கூட, அவ்வோது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை கவனித்தபடி பயணிப்பது நல்லது.
பிரச்னை வருவதாக தெரிந்தால், அங்கு ஏதேனும் குடும்பத்தினர் ஒன்றாக இருக்கும் இடத்தை அணுகி உதவி கோரலாம்.
சில சமயம் பிரச்னைக்குரிய நபரை தைரியமாக திரும்பி நின்று ”என்ன வேண்டும்?” என துணிச்சலோடு கேட்கும் ஒற்றை கம்பீர வார்த்தையும், பார்வையும் கூட, அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாமல் பின்வாங்கிவிடச் செய்ய ஏதுவாக இருக்கும்.
சிசிடிவி இருக்கும் இடத்தில் நின்றுகொண்டு எதிர்ப்பது சற்று பாதுகாப்பு தரும்.
குறைந்தபட்சம் அடிப்படைத் தற்காப்பு நடைமுறைகளை, நுணுக்கங்கள் தற்போது இணையத்தில் கூட அதிகம் உள்ளது. அதனைப் பார்த்து ஒரு சில முறை வீட்டிலேயே பயிற்சி எடுத்தால் கூட, எளிதில் அசாதாரண சூழல்களில் தங்களை விடுவித்து தப்பிக் கொள்ளலாம்.
இரவில் வெளியே செல்வதாக இருந்தால், போனில் போதிய சார்ஜ் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
வெளியில் தங்க நேர்ந்தால், ஹோட்டல்களின் ரிவ்யூக்களைக் கண்டு முன்பதிவு செய்யலாம்.
சந்தேகத்துக்கு இடமான ஹோட்டல்களைத் தவிர்த்து பெண்களின் தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு முன்னுரிமை தரலாம்.
உடன் வசிக்கும் பெண்களுடன் தோழமையாகி எண்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உள்ளூர் நிலவரங்களையும், கலாச்சாரத்தையும் விடுதியில் கேட்டோ, செய்தி ஊடகங்கள் மூலமோ தெரிந்து கொள்ளலாம்.
பூ விற்பவர், ஹோட்டலில் வேலை செய்யும் பெண் ஆகியவர்களிடம் அறிமுகமாகிக் கொள்ளலாம். ஆனால், உங்களைப் பற்றிய முழு விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.
முன்பின் தெரியாதவர் தரும் உணவுப் பண்டங்களை வாங்கி சாப்பிட வேண்டாம்.
ஒருவேளை உங்களுக்கே பசியாக இருக்கிறது என்றால்கூட, கையடக்க உணவுப்பண்டங்களையும் குடிநீரையும் உடன் எடுத்துச் செல்வது நல்லது.
இரவில் தனித்து வாடகை வாகனத்தில் பயணிப்பதைக் காட்டிலும், தெரியாத இடங்களில் கூட்டம் நிறைந்த பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு தரலாம்.
மொத்த பணத்தையும் ஒரே இடத்தில் வைக்காமல், வெவ்வேறு இடங்களில் பிரித்து வைப்பது நல்லது.
முன் பின் தெரியாதவரிடம் பேசும் போது, “நான் வந்தேன் எனக் கூறுவதை விடுத்து, நாங்கள் வந்தோம்” என பன்மையில் கூறலாம்.
உடன் யாரும் வராவிட்டாலும் போலியாக ஒரு கூட்டாளியை பேச்சளவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
சென்றுள்ள இடத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஏற்றார்போல் உடையணிந்தாலே, வெளியூர் பெண் எனக் கூறி ஏமாற்ற முயலமாட்டார்கள்.
இரவில் பயணிப்பதாக இருந்தால், பகலில் நேரம் கிடைக்கும்போது உறங்கிக் கொள்ளலாம். இரவுப் பயணங்களில் புத்தகம் படிக்கும் பழக்கம் கூட உங்களை விழித்திருக்க வைக்கும்
இக்கட்டுரையின் அடுத்த பாகத்தைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.