பையன் படத்தையே வச்சு செஞ்சாரா எஸ்.ஏ.சி. உண்மையில் நடந்தது என்ன?
தேசிங்கு ராஜா பாகம் 2 பட விழாவில், இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், ராஜா, மனம் கொத்தி பறவை, தீபாவளி உள்ளிட்ட படங்களை இயக்கிய எழில் தேசிங்கு ராஜா படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து 2-ம் பாகத்தை எடுத்துள்ளார்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் கலந்து கொண்டு மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ஏற்கனவே தனது மகனுக்கும் தனக்கும் புகைச்சல் இருப்பதாக ஊடகங்கள் கூறிய போது எஸ் ஏசியும் சோபாவும் இதனை வெளிப்படையாக கூறவில்லை.
ஆனாலும் அவர்கள் சந்திக்காதது விழாவில் கலந்து கொள்ளாதது பிரச்சனைகள் வந்தபோது உடன் நிற்காதது உள்ளிட்டவற்றை வைத்து ரசிகர்களாகவே அவர்களைப் பற்றிய ஒரு புரிதலில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர் இதனை மேலும் ஊர்ஜிதப்படுத்தும் விதமாக சந்திரசேகரீன் பேச்சு தற்போது அமைந்துள்ளது.
பட விழாவில் பேசிய அவர் ” என்னிடம் கதை சொல்பவர்களிடம் நான் குறை சொல்ல மாட்டேன். ஒரு பார்வையாளனாக என் மனதில் எழும் சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்பேன். பொதுவாக படம் பாமர மக்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவே இதை செய்வேன். ஆனால் இப்போதெல்லாம் யாரும் கதை, திரைக்கதைக்கு மரியாதை கொடுப்பதாக தெரிவதில்லை.
ஒரு ஹீரோ அதுவும் பெரிய ஹீரோ கிடைத்துவிட்டால் போதும். எப்படியும் ஒரு படத்தை எடுத்து வெற்றி அடைந்து பெரிய இயக்குனராகி விடலாம் என நினைக்கிறார்கள். ரசிகர்கள் கூட ஹீரோவுக்காக தான் படம் பார்க்க தற்போது பழகி இருக்கிறார்கள். ஒரு படத்தின் கதை, திரைக்கதை பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை பெரிதாக இல்லை. ஹீரோவுக்காக படம் ஓடி விடுகிறது.
எனவே அந்த இயக்குனரும் பெரிய ஆளாக மாறிவிடுகிறார்” என்று கூறினார்.
“என்னடா இப்படி தப்பா பேசுறன்னு நினைக்க வேண்டாம், பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுப்பவர்கள் நல்ல கதை, திரைக்கதை போட்டு படம் எடுத்தால் படம் இன்னும் பெரிய அளவு வெற்றியை கொடுக்கும் என்பதற்காக தான் சொல்கிறேன்”
என்ற இவர் பேசியதுமே தனது மகனைப் பற்றித்தான் கூறுகிறாரோ என்று சந்தேகம் ஒரு சிலருக்கு வந்திருக்க கூடும் .
அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையாக தான் அவரது பேச்சு தொடர்ந்து அமைந்தது.
சமீபத்தில் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு அந்த இயக்குனருக்கு நான் போன் செய்தேன். படத்தின் முதல் பாதி சூப்பர் என்று பாராட்டிய போது அமைதியாக கேட்டுக் கொண்டார். இரண்டாம் பாதியில் சில குறைகள் இருக்கிறது என சொல்ல தொடங்கியதும் ‘சாப்பிட்டுட்டு இருக்கேன் சார், அப்புறமா கூப்பிடுறேன்’ என சொல்லி போனை கட் செய்துவிட்டார். இதற்கு அடுத்து அவர் இதுவரை எனக்கு கூப்பிடவே இல்லை என்றார்.
அந்த குறிப்பிட்ட மதத்தில் இது போன்ற நம்பிக்கை இருக்காது. தகப்பனே தன்னுடைய பிள்ளைகளை கொல்வது சரியாக இல்லை” என்று படத்தின் 2ம் பாதியில் இருக்கும் குறைகளை சொல்ல ஆரம்பித்த போது அதை அவர் கேட்கவில்லை” என்று எஸ் ஏ சந்திரசேகர் கூறினார்
விஜய் நடித்த லியோ படத்தின் 2ம் பாதியில் தான் நரபலி கொடுக்கும் பழக்கம் அந்த நம்பிக்கை எல்லாம் இல்லை என்றும் ஒரு தகப்பனை தன்னுடைய பிள்ளைகளை கொலை செய்வது பற்றியும் காட்சிகள் வரும்.
விஜயின் தந்தை கதாபாத்திரத்தில் வருபவர் தனது தொழில் பெருக வேண்டும் என்பதற்காக தான் பெற்ற மகளையும் பலி கொடுத்து விடுவார்.
இதை சுட்டிக்காட்டியே எஸ் எஸ் சந்திரசேகர் தற்போது பேசியிருப்பதாக சொல்லப்படுகிறது.
படத்தைப் பற்றி தொடர்ந்து பேசிய அவர், “அந்த படம் வெளியானபோது படத்தை பார்த்த பார்வையாளர்கள் நல்லா வச்சு செஞ்சாங்க. நான் சொன்ன குறைகள் என்னென்னவோ அதைத்தான் அவர்களும் சுட்டிக்காட்டி விமர்சித்தாங்க. ரிலீசுக்கு முன்பே நான் அந்த படத்தை பார்த்து குறைய சொல்லிட்டேன். ஆனா அதை மாத்துறதுக்காக அவங்களுக்கு 5 நாட்கள் நேரம் இருந்தது. அந்த குறைகளை அப்பவே சரி செஞ்சி இருக்கலாம். ஆனா நான் சொன்னதை கேக்கல. இது போன்ற சிலரிடம் விமர்சனத்தை காது கொடுத்து கேட்கும் தைரியமும் பக்குவமும் சில இயக்குனர்களுக்கு இல்லை” என்று கூறியிருக்கிறார்.
“இதேபோல துப்பாக்கிப் பட இயக்குனர் என்னிடம் கதை சொல்லும் போது கதையைக் கேட்டு அவரை கட்டிப் பிடித்துக் கொண்டேன். பின்னர் அவரிடம் ஸ்லீப்பர் செல் பற்றி மக்களுக்கு புரியுமா என்ற ஒரே கேள்வி தான் கேட்டேன். ஆனால் படம் வெளியானபோது ஸ்லீப்பர் செல்லை பற்றி அவர் விளக்கும் வகையில் ஒரு காட்சி வைத்திருந்தார். இதுதான் அவருடைய பக்குவம்” என்று கூறியிருந்தார்
“என்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடம் ஒரு தந்தையாகவும், அண்ணனாகவோ பொறுப்போடும் அக்கறையோடும் விமர்சனங்களை கூறி வருகின்றேன். ஆனால் அதைக் கேட்கும் பக்குவம் தான் சிலருக்கு இருப்பதில்லை” என்றும் கூறினார்.
இவர் எந்த படத்தை பற்றி எப்படி ஒரு விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கவும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.