ரூ.4 கோடி கொண்ட தன் மண்ண ஏழை மாணவர்களுக்காக கொடுத்த ஆயி அம்மா!

ஏற்கனவே மதுரையில் திருப்பதி வத்தல் என்ற நிறுவனம் நடத்தி வரும் டி பி ராஜேந்திரன் என்ற தாத்தா கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடத்தை பள்ளிக்கூடங்களுக்கும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கட்டிடங்களுக்கும் தானமாக வழங்கினார்.

அந்த வகையில் கிட்டத்தட்ட ஓராண்டாக இடம் தானம் செய்ய முயற்சித்து, தற்போது வெற்றி பெற்றிருக்கிறார் ஆயி என்ற பூரணம் அம்மா.

மதுரை கொடிக்குளத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆயி. இவருக்கு ஜனனி என்ற ஒரு மகள் இருந்தார்.

அவரது பிரிவுக்குப் பின், ஜனனியின் நினைவாக தனது பெயரால் கொடி குளத்தில் உள்ள 1.52 ஏக்கர் நிலத்தை தற்போது அரசு பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டி அந்த இடத்தை தானமாக வழங்கியுள்ளார் ஆயி அம்மா.

அந்த இடத்தின் இன்றைய சந்தை மதிப்பு ஒன்றல்ல, இரண்டல்ல, 4 கோடி ரூபாய். அதை தானமாக வழங்கியுள்ள ஆயி அம்மா அவ்வளவு வசதி படைத்தவர் ஒன்றும் இல்லை. அரசு வங்கியில் கிளர்க்காக பணியாற்றுகிறார்.

மாத சம்பளம் பெற்று வரும் போதும் கூட ஆயி அம்மாள் அந்த இடத்தை தனக்கு மட்டுமே என உடமையாக்கிக்கொள்ள விரும்பவில்லை. தனக்கு சொந்தமான அந்த இடத்தை தான் பயின்ற அதே பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில் வழங்கி இருக்கிறார். இதற்காக அவர் எந்த ஒரு பணமும் பெற்றுக் கொள்ளவில்லை.

இதுகுறித்து பேசிய ஆயி அம்மா, “இந்த இடம் என்னுடைய தந்தை கொடுத்தது. தந்தையின் நினைவாக சொத்துக்களை பிரிக்கும் போது வந்தது. நாங்கள் 5 பேர் அதில் எனது பங்குக்கு வந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை தான் தற்போது நான் தானமாக வழங்கியுள்ளேன். இது என்னுடைய முடிவல்ல எனது மகள் ஜனனியின் முடிவு. அவள் தான் தனது சொத்து, நகை உள்ளிட்ட அனைத்தையும் ஏழை எளிய மாணவர் செல்வங்கள் பயன்பெறும் வகையில் கொடுத்து விடுமாறு என்னிடம் கூறியிருந்தார். அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காகவே நான் இவ்வாறு செய்துள்ளேன்.

நான் இவ்வாறு செய்வதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக எந்தவித ஆர்ப்பாட்டமும், விளம்பரமும் இன்றி அமைதியாக தான் செய்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட ஓராண்டாக இதற்கான பத்திரத்தை தானமாக மாற்றும் பணி நடைபெற்று வந்தது அனுமதி கிடைக்கவே தாமதமானது. இந்த நிலையில் எனக்கு அனுமதி கிடைத்தவுடன் அதனை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும் போது தான் இந்த தானம் பற்றி வெளியில் தெரிந்தது.

அதுவும் என்னை பார்த்து யாரேனும் இதுபோன்று உதவ முன் வரக்கூடும் என அனைவரும் சமாதானப்படுத்தியதால் தான் நான் இதனை வெளியே தெரிவிக்க ஒப்புக்கொண்டேன். எனது மகளின் மீதமுள்ள சொத்துக்களை வைத்து ஏழை மாணவர்களுக்கு சீருடைகள் வாங்கித் தரவுள்ளேன்.

அந்த சொத்தை விற்று வரும் பணத்தைப் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக பல டிரஸ்டுகளுக்கு கொடுத்திருக்க முடியும். ஆனால், நான் பிறந்த இந்த மண்ணில் உள்ள இதே பள்ளிக்கூடம்தான் என்னைப் படிக்க வைத்தது. அதை வைத்துத்தான் நான் இன்று ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறேன். தற்போது நான் கிளர்க்காக வேலை பார்க்கிறேன். இடத்தை தானமாக கொடுத்த மறுநாளே நான் பணித்து சென்று விட்டதால், அங்கு என்னை பாராட்ட ஏராளமானோர் குவிந்துவிட்டனர். இந்தியா முழுக்க கனரா வங்கி கிளைகளில் பணியாற்றும் பலரும் நீங்கள் கனரா வங்கிக்கு பெருமை சேர்த்துவிட்டதாகக் கூறி பாராட்டி வருகின்றனர். இந்த பாராட்டுக்கள் அனைத்தும் எனது மகளைத் தான் சேரும் என்றார் கண்கலங்கிய படி.

ஆயி அம்மாவையும், அவரது மகள் ஜனனியின் கனவையும் த காரிகை வெகுவாகப் பாராட்டி மகிழ்கிறது. கருணையுள்ளங்கள் பெரும்பாலும் காரிகைகளிடம் அதிகம் இருக்கும் என்பதை இச்சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE