கத்துக்கோங்கப்பா! ரூ.35,000 கோடி சொத்து சேர்த்து சிம்பிளா வாழும் பெண்

தமிழில் ஒரு பழமொழி உண்டு. “கோமணத்தில் 10 காசு இருந்தா கோழி கூப்பிட பாட்டு வருமாம்.” எனக் கூறுவார்கள். அப்டி கையில் காசு வந்ததும் தாராளமாக செலவு செய்வோருக்கு மத்தியில் ஒன்றல்ல 100 அல்ல 35 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்தும் மிக மிக எளிமையாக வாழ்கிறார் ராதா வேம்பு.

ராதா வேம்புவின் தலைமையின் கீழ், Zoho 180 நாடுகளில் கிளைபரப்பி மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. இப்பெண், வணிகம் மட்டுமின்றி கல்வித் துறையில் இளைஞர்களை மேம்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

கோடிக்கணக்கான இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அவரது வாழ்க்கை பல போராட்டங்களைக் கொண்டது. செல்ஃப்-மேட் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை 360 One Wealth Hurun India Rich List 2023-ன் மூலம் பெற்றார்.

இவரது சொத்து மதிப்பு ரூ. 34,900 கோடி ஆகும். இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 40வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராஃபராக இருந்து ஓய்வு பெற்றார். மிகவும் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அவர், சென்னை ஐஐடியில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்ற பிறகு 1997-ல் Zoho-வில் சேர்ந்தார்

தொழில்நுட்பத்தில் புதுமையைப் புகுத்திய அவர், அந்தப் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான Zoho கார்ப்பரேஷனில் இருந்து ராதா வேம்புவுக்கு மிகப்பெரும் வருமானம் வந்தது. தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு 5 சதவீத பங்கையும், அவரது சகோதரி ராதா வேம்பு, 47 சதவீத பங்குகளையும் வைத்துள்ளனர்.

இருந்தபோதும் கூட அவரது ஆடை முறையும், வாழ்க்கை முறையும் மிகவும் எளிமையாகவே உள்ளது. சாதாரண நடுத்தரக் குடும்பப் பெண் போன்றே தான் எப்போதும் நடந்துகொள்வார். ஆடம்பரம் என்பது அவருக்கு வெகு தூரம். சில சமயம் பொதுப் போக்குவரத்தைக் கூட அவர் பயன்படுத்தி வருவதும் பலரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE