ரூ.3010 கோடி – விஜய், ரஜினி இல்ல. யாரந்த பணக்கார நடிகர்?
தென்னிந்தியாவின் மிகவும் பணக்கார நடிகர்கள் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் ஒருவர். அவருடைய மொத்த சொத்தின் மதிப்பு 3010 கோடி ரூபாய். அவருக்கு என தனியாக பிரைவேட்ஜெட் உள்ளது. 45 கோடியில் பங்களா உள்ளது. இன்னும் பல சொத்துக்கள் கொட்டி கிடக்கின்றன. ஆனால் அவர் ராம்சரணோ, தளபதி விஜயோ, ரஜினிகாந்த்தோ அல்ல, யார் அவர் என்பதை “த காரிகை” உங்களுக்கு வழங்குகிறது
தென்னிந்திய திரைப்படம் என்றாலே ரஜினி,விஜய், மம்முட்டி, மோகன்லால், என்டிஆர், ராமாராவ் என பல நடிகர்கள் வரிசை கட்டி நிற்பார்கள். ஆனால் சொத்து மதிப்பு என்று பார்த்தால் ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு மாதிரியான சம்பளமும் ஒவ்வொரு மாதிரியான தொழில் வாய்ப்புகளும் பெற்று வித்தியாசமாக வெவ்வேறு இடங்களை பிடித்துள்ளனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா கணிப்பு படி ரஜினிகாந்தின் மொத்த சொத்து மதிப்பு 430 கோடியாக உள்ளதாம். அதுவும் ஜெய்லர் படத்துக்காக 110 கோடி ரூபாய்க்கு செக் வாங்கி இருக்கிறார் தலைவர்.
பிகில் மாஸ்டர் பீஸ்ட் படங்களை அடுத்து லியோ படத்துக்கு ரூ.130 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார் நடிகர் விஜய்.
விக்ரம் படத்தை அடுத்து இந்தியன் 2 படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் 150 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.
ஆனால் இவர்களை விட குறைந்த சம்பளம் வாங்கிய ஒரு நடிகர் ரூ.3,010 கோடி ரூபாய் சொத்து சேர்த்து, தென்னிந்திய நடிகர்களிலேயே அதிக சொத்து மதிப்புடன் உள்ளாராம். அவர்தான் அக்கினேனி நாகர்ஜூனா.
தெலுங்குத் திரையிலகில் 3 தலைமுறையாக நடிகர் குடும்பம். அதுவும் வெற்றிகரமாக வலம் வருகிறது என்றால் அது அக்கினேனி குடும்பம்தான். அக்கினேனி, நாகர்ஜூனா, அமலா, நாக சைதன்யா, அகில் அக்கினேனி ஆகியோர் திரைப் பிரபலங்கள். மூத்த மகன் நாக சைதன்யாவைத்தான் நடிகை சமந்தா திருமணம் செய்து பின் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
நாகர்ஜூனாவின் முதல் மனைவி லக்ஷ்மி டகுபாட்டி பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1984-ல் திருமணம் செய்து 1990-ல் விவாகரத்து செய்தார். இதையடுத்து நடிகை அமலாவைத் திருமணம் செய்து கொண்டார் நாகர்ஜுனா ராவ்.
நாகார்ஜூனா என்னதான் ஒரு படத்துக்கு 9 முதல் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருந்தாலும் அவரது குடும்பப் பின்னணி பெரியது. நாகர்ஜூனா ராவின் தாயார் பெயரில் அவரது தந்தை அன்னபூர்ணா ஸ்டூடியோசை 1976-ல் தொடங்கி பல தெலுங்கு படங்களைத் தயாரித்தவர். அதன் இணை உரிமையாளர் நாகார்ஜூனா. அதுமட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலிலும் கொடிகட்டு வருகிறார் இவர்.
இதனால்தான் அவரது சொத்து மதிப்பு ரூ.3,010 கோடி என டிஎன்ஏ பத்திரிக்கை கூறியுள்ளது. இவருக்கு ரூ.45 கோடியில் பங்களா உள்ளதாம். பிரைவேட் ஜெட், திரைப்படக் கல்லூரி உள்ளிட்டவையும் உள்ளதாம். இதையடுத்து நாகர்ஜுனாவின் மூத்த மனைவி லக்ஷ்மி டகுபாட்டி குடும்பத்தில் வந்த டகுபாட்டி வெங்கடேஷ் டகுபாட்டிதான் தென்னிந்திய நடிகர்களில் அதிக சொத்துடன் 2ம் இடத்தில் உள்ளாராம். அவரது சொத்து மதிப்பு ரூ.2,200 கோடியாம்.
நடிகர் சிரஞ்சீவி ரூ.1,650 கோடி சொத்துக்களுடன் 3-ம் இடத்தில் உள்ளார். அவரது மகன் ராம் சரண், ரூ.1,370 கோடி சொத்துடன் 4-ம் இடத்தில் உள்ளார். தளபதி விஜய், ஜுனியர் என்டிஆர், கமல்ஹாசன், அல்லு அர்ஜூன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனராம்.
இதில் ஒரு விஷயம் கவனித்தாக வேண்டும். என்னதான் தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 சொத்து உள்ள நடிகரின் மகனைத் திருமணம் செய்தாலும், சுய மரியாதைதான் முக்கியம் என ஒரு பைசா ஜீவனாம்சம் கூட வாங்காமல் நாக சைதன்யாவுடனான திருமண வாழ்க்கையை முறித்து வெளியேறியிருக்கிறார் சமந்தா. நம்மூருப் பொண்ணுங்கன்னாலே கெத்து தாங்க. . இல்ல?. . . .
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.