ரூ.1,000 உங்களுக்கு கிடைக்குமா? கிடைக்காதா? எப்புடி தெரிஞ்சுக்கறது?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்டம்பர் 15 -ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விநியோகத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பெண்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர். ஆண்டுக்கு ரூ.12,000 கோடி அரசுக்கு செலவாகும் அளவு இத்திட்டம் மிகப்பெரியது.
2 கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. ஆனால், இதிலிருந்து ரூ.1 கோடி பெண்களை மட்டும் தேர்வு செய்து திட்டத்தின் பயனாளிகளாக இணைக்க உள்ளனர். இது மிகவும் சவாலான பணிதான். அதனை அரசு அதிகாரிகள் ஈடுபட்டு பயனர்களை உறுதி செய்து வருகின்றனர். அவர்களது வங்கி கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
2 கட்டங்களாக நடைபெற்ற விண்ணப்பதிவு முகாம்கள் தமிழகம் முழுவது மஅனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றன. சுமார் ரூ.1.63 கோடி-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் சரிபார்ப்பு என்பது கள ஆய்வு மூலம் நடைபெறும்.
இந்த மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிராகரிக்கப்பட்டவர்கள் பட்டியலும் எடுக்கப்பட்டுள்ளதாம்.
தங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்பது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
அதுமட்டுமின்றி விண்ணப்ப முகாம்கள் நடைபெற்று வந்த போதே தமிழக அரசு இருமுக்கிய அறிவிப்புகளை வெளியிட்டன. முதியோர் ஓய்வூதியம் பெறுவோரும், விதவை ஓய்வூதியம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் ஆகியவை பெறுவோருக்கு இந்தப் பணம் கிடைக்காது என ஏற்கெனவே தகுதிப்பட்டியலுக்கான வரன்முறையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இவர்களும் தகுதியானவர்கள் பட்டியலில் வரக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
அதேபோல் அரசு அறிவித்த தகுதி பட்டியலில் 1 கோடி பேருக்கும் அதிகமானோர் வந்தால் அனைவருக்கும் வழங்கப்படுமா? அல்லது ஒரு கோடி பேர் என்ற அளவில் அரசு கதாராக இருக்குமா? எனத் தெரியாத அளவு குழப்பம் நீடித்தது.
இதையடுத்து தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் அந்த சந்தேகத்துக்கும் பதிலைக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகவல் தெரிவிப்பதற்கான பணிகள் முடிவுற்றுள்ளன.
எனவே உங்களுக்கும் இந்த எஸ்எம்எஸ் வந்துள்ளதா? என மெசேஜ் இன்பாக்சை செக் செய்துகொள்ளவும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.