8-வது முதலே காதல், மாதாமாதம் லவ்வுக்கு கிஃப்ட். இருந்தும் பிரிஞ்சது இதுக்கு தானா?
பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து, பிரம்மாண்டமாக பெற்றோர் முன்பும் திரையுலகினர் முன்பும் திருமணம் செய்து, ஆளாளுக்கு மாறி மாறி அன்பைப் பொழிந்து, பர்ஃபெக்ட் மேட்ச் என பெயர் எடுத்த இசைத்தம்பதி ஜிவி பிரகாஷ் சைந்தவி. இவர்கள் தங்களது 11 ஆண்டு திருமண வாழ்வில் இருந்து அவரவர் வழியை நோக்கி பிரிந்து செல்வதாக அறிவித்துள்ளனர்.
இவர்கள் பற்றி பலரும் அறியாத சில தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளது “த காரிகை”.
யார் இந்த ஜி வி பிரகாஷ்?
ஜிவி பிரகாஷின் தாய்மாமா, ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான். இவர் ஏ ஆர் ரஹ்மானுடைய அக்கா ரிஹானாவின் மகனாவார். ஏ ஆர் ரகுமானிடம் அசிஸ்டன்ட் ஆகவும் பணியாற்றியவர் ஜி.வி பிரகாஷ். இசைத்துறையில் ‘வெயில்’ என்ற திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் இவர்.
இதை அடுத்து கிரீடம், பொல்லாதவன், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன என 2011 வரை பிக் ஹிட் கொடுத்த அவர் அதை அடுத்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். தயாரிப்பாளராகவும் பின்னணி பாடகர் ஆகவும் பன்முக திறமைகளை கொண்ட இவர், சைந்தவி 8வது படிக்கும் போது இருந்தே அவரை காதலித்தார்.
சைந்தவி யார்?
பள்ளி பருவத்தில் இருந்து பாடத் தொடங்கிய சைந்தவி அந்த இசை கலையில் தான் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து இருக்கிறார்.
சைந்தவி ஒரு தனியார் பள்ளியில் 8வது படிக்கும் போது அதே பள்ளியில் 10வது படித்து வந்தவர் ஜிவி பிரகாஷ். அவர் பள்ளியின் லைட் மியூசிக் குழுவில் இன்ஸ்ட்ருமென்ட் வாசிப்பாளராக இருக்கும் போது சினிமாவில் பாடி வரும் ஒரு மாணவி தங்களது பள்ளியில் படிப்பதாக இசைக்குழு நண்பர்கள் சைந்தவியை ஜிவிக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். இதையடுத்து சைந்தவி அந்தக் குழுவில் பாடியும் இருக்கிறார். அவர்கள் சென்ற இடம் எல்லாம் முதல் பரிசுகளை தட்டி உள்ளனர்.
பள்ளியில் ஜிவி பிரகாஷ் வேறு ஒரு தளத்தில் இருக்கும்போது கூட ,அவரைப் பார்த்து சைட் அடித்து, புன்னகைத்து செல்வதற்காக மட்டுமே தினமும் 3 தளங்கள் ஏறி, இறங்கி அவரது வகுப்பறையை கடந்து செல்வாராம் சைந்தவி.
இருவரும் காதலித்து சென்னையில் திரை உலகினர் முன்னிலையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். 7 வருடங்களுக்கு பிறகு அவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தையும் பிறந்தார்.
சைந்தவியின் பாடல்கள்
சைந்தவி திரையுலகில் பல மைல் கல் பாடல்களை பாடியுள்ளார்.
அன்னியன் படத்தில் அண்டங்காக்கா கொண்ட காரி, பையா படத்தில் அடடா மழைடா, சுறா படத்தில் தஞ்சாவூர் ஜில்லாக்காரி, மதராசபட்டினம் படத்தில் ஆருயிரே ஆருயிரே, தெய்வத்திருமகளில் விழிகளில் ஒரு வானவில், சுந்தரபாண்டியனில் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள, தலைவா படத்தில் யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது என பல்வேறு பாடல்களை பாடியவர் இவர்தான்.
மாதாமாதம் லவ் கிஃப்ட்
ஜிவி பிரகாசுக்கும் சைந்தவிக்கும் திருமணம் ஆனது ஜூன் 27. ஆனால் ஆனிவர்சரி மாதிரி மந்திவர்சரி கொண்டாடி இருக்கிறார் சைந்தவி.
ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதி வந்தால் ஜி வி பிரகாசுக்கு பிடித்தமான பரிசுகளை கேட்டு கேட்டு வாங்கி பரிசளிப்பாராம் சைந்தவி.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்த கதைகளை அவர்களே மெய்சிலிர்த்து கூற, பல சமூக வலைதளங்கள் தற்போது அவற்றை மீண்டும் ட்ரெண்டாக்கி வருகின்றன.
பிரிவுக்கு காரணம் என்ன?
சைந்தவியும் ஜிவி பிரகாசும் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இருவரது ”மன நிம்மதிக்கும் முன்னேற்றத்திற்கும்” பிரிவதாக என ஒரு வார்த்தையை கூறியுள்ளனர்.
இசையமைப்பாளர் என்ற நிலையில் இருந்து நடிகராக ஜிவி பிரகாஷ் உயர்ந்த பின்பு அவர் பல நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து வருகிறார்.
இது ஒருவேளை சைந்தவிக்கும் பிடிக்காமல் போய் அவர் ஜிவி பிரகாஷை கண்ட்ரோலில் வைக்க முயற்சித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என இணையத்தில் ஒரு விவாதமே நடந்து வருகிறது.
பஞ்சாயத்துக்கு முயன்று ஏ ஆர் ரகுமான்
4 வருடங்களாகவே அவர்கள் விவாகரத்து பற்றி பேசி வருவதாகவும் இது திரையுலகினர் பலருக்கும் தெரியும் என்றும் ஏ ஆர் ரகுமான் முயற்சித்தும் அவர்கள் இணைந்து வாழ விரும்பவில்லை என்றும் சினிமா விமர்சகர் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். 2 பேரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்பதை அறிந்த ஏ.ஆர்.ரஹ்மான்; ஜிவி பிரகாஷை அழைத்து, ‘குடும்பம் வேறு தொழில் வேறு. உனக்குதான் இசையமைக்க நிறைய படங்கள் வருகின்றனவே அதில் கவனம் செலுத்து; ஏன் நடிக்க வேண்டும் . இதனால் இப்போ பிரச்னைதானே வருகிறது’ என்று சொன்னார். இருந்தும் கேட்கவில்லை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்
பிரிவுக்கு காரணம் இதுதான்
இருவரும் இருவருடைய முன்னேற்றத்திற்காக பிரிவதாக கூறியிருப்பதால், என்ன காரணமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். நீங்களும் அப்படி ஏதேனும்யோகித்திருந்தால் கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கவும்.