நரை முடிக்கு காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
முடி நரைச்சா பெருசா எல்லாரும் என்ன சொல்லுவாங்க? வயசு ஆகிடுச்சு அப்படின்னு சொல்லி சொல்லுவாங்க. ஆனா அது மட்டும் காரணம் இல்ல. சமீபத்திய ஆய்வுல என்ன தகவல் தெரிய வந்திருக்கு அப்படிங்கறத இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
- முடி நரைத்தலும், பிம்பங்களும். . .
இதுவரைக்கும் முடி நரைக்க காரணம் வயதுமுதிர்வு, மன அழுத்தம், உணவு பற்றாக்குறை, சத்து பற்றாக்குறை, போதிய நீர்ச்சத்து இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சொன்னார்கள். ஆனா, அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகம் லகான் என்ற மருத்துவ ஆய்வு மையத்தில், புதியதொரு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். ஒரு சில எலிகளை பரிசோதனைக்கு எடுத்து, நரைமுடி வருவதற்கான காரணங்களை ஆய்வு செய்தனர். அதற்கு ஸ்டெம் செல்களே காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
- என்ன மாதிரியான ஆய்வு?
வயதான செல்களின் செயல்முறைகளை ஆய்வு செய்தனர். இதற்காக சிறப்பு ஸ்கேன் மற்றும் ஆய்வக தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டது. சருமத்தில் காணப்படும் மயிர்க்கால்கள் பற்றி மிகவும் உன்னிப்பாக கவனித்து ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதற்காக எலிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. பொதுவாக மயிர் கால்களில் இருந்து தான், புதிய முடி வளர தொடங்கும். அந்த புதிய முடி வளரும் இடத்தில் நிறமியை உருவாக்கும் மெலனோசைட் இருக்கும்.
- மெலனோசைட் தேக்கம் ஏன்?
ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின், மெலனோசைட்டுகள் அவ்வப்போது சிதைவடைந்து போகும். அதன் பின்னர் மீண்டும் புதிதாகத் தான் உருவாகும் என்பது ஆராய்ச்சியில் மீண்டும் ஒருமுறை நீரூபணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்டெம்சல்கள் தான் முடிகளுக்கு இடையில் சிக்கி நரை முடியை உருவாக்கும் காரணியாக அமைந்துள்ளதாக கூறுகின்றனர்.
- கிரே ஹேர் காரணிகள் என்ன?
பொதுவாகவே மெலனோசைட் ஸ்டெம் செல்கள் என்பது, சிதைந்து போனதும் சுற்றுத் திரியும் தன்மையை இழந்து விடுமாம். எனவே அது இடம்பெயராது ஒரே இடத்தில் தங்கிவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் தலைமுடியானது சாம்பல், வெள்ளை, வெள்ளி உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் மாறுதல் அடைகிறது. இதனை ஆங்கிலத்தில் கிரே ஹேர் என குறிப்பிடுவர்.
- ஆய்வின் முடிவு என்ன?
இது குறித்த ஆய்வு ”நேச்சர்” என்ற மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த ஆய்வாளர் குய் சன் ”மெலனோசைட் ஸ்டெம் செல்கள் முடியில் எவ்வாறு நிறத்தை மாற்றுகிறது என்பதை பற்றிய அடிப்படை தெளிவை தருகிறது“ என விளக்கம் கொடுத்துள்ளார்
- அடுத்தகட்ட ஆய்வு?
சரி ஆய்வு இத்துடன் ஆய்வு முடிகிறதா என்றெல்லாம் ஆய்வாளர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஆனால், இது தொடர்பாக மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இன்னும் ஆழமான காரணிகள் ஏதேனும் உள்ளனவா?. அவை நரைமுடியை உண்டாக்குவதற்கான சாத்திய கூறுகளை அதிகப்படுத்துகிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ள The Karigai-யின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடருங்கள்!
இதையும் படிங்க. . . 28% பேருக்கு மாரடைப்பு அபாயம்! – The Karigai