மஹாலட்சுமி – ரவீந்திரன் திருமண நாள், கவிதையா காதலிக்குறாங்கப்பா
ரவீந்திரன் போஸ்ட்
முதலாம் ஆண்டு திருமண நாள்
இதை எப்படி ஆரம்பிப்பது…? எப்படி சொல்ல….?
ஒரு வருஷம் ஜஸ்ட் லைக் தட் அப்படின்னு ஃபாஸ்ட்டா போயிடுச்சு
போன வருஷம் இந்த நாட்டோட பிரச்சனை எங்க கல்யாணம்
போற இடம் எல்லாம் கண்காட்சி பொருள் மாதிரி பார்த்துட்டு போனாங்க
இது எப்படி சாத்தியம் ஆச்சு
நிச்சயம் பணத்துக்காக தான்
மூணு மாசம் தாங்குமா
பாப்போம் இது எவ்வளவு நாளைக்கு
சீக்கிரம் ரெண்டு பேரும் அடிச்சுகிட்டு வீடியோ இன்டர்வியூ கொடுக்கும் பாருங்க
ஷ்ஷ்ஷ்ஸ்
போதும் முடியல
அப்படி நாம ஆசைப்படுறதுகும் அதுக்கு சின்சியரா இருக்கிற ஒரு வாழ்க்கை கெடச்சது எனக்கு வரம்
எனக்கு நிறைய தோணுச்சு
இவ பயங்கர ஆட்டிட்யூட் போல
கோலம் போடுவது
காபி இல்லனா சமையல்
அப்புறம் வீட்டு வேலை எல்லாமே
வீட்டு வேலைக்கு ஆள் போட்டு தான் பாக்கணும் அப்படின்னு நினைச்சேன்
தக்காளி
சீரியல் பொண்ணு சீரிஸ் செய்யுதுப்பா
காலையில நேரமா எந்திரிக்கிறது
சுத்தி சுத்தி கோலம் போடுவது
சூப்பரான காபி
கொஞ்சம் கன்றாவியான சமையல்
நல்லா இருக்கு பாப்போம்
மூணு மாசத்துக்கு அப்புறம் ஸ்விக்கி இல்ல டன்சோ தான்னு நினைச்சேன்
பாப்பா கலக்கிட்டப்பா
இது நம்ம டிவில பாக்குற சீன் எல்லாம் இல்ல
அதுக்காக திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை
பட் லவ்வு, உங்க வீட்டு லவ்வு எங்க வீட்டு லவ்வு இல்லை
மொரட்டு லவ்வு பண்றா
என்ன இவளுக்கு என் மேல ரொம்ப லவ் வந்துச்சுன்னா
உடனே காமிச்சே தீரனும்னு சமைக்க போய்டுவா
அப்பதான் எனக்கு என்னுடைய இன்சூரன்ஸ் பாலிசி ஞாபகம் வரும்
போன வாரம் தான் பீன்ஸ் செய்ய ஆரம்பிச்சா
தேவுடா….
நாங்க பிரிஞ்சிட்டோம்
அப்புறம் சோகத்தில் வாழறோம் அப்டின்னு
11 மாசம் youtubeல எங்கள வச்சு போடும் போதெல்லாம்
அம்மு நாம வாழ்ந்து காட்டணும் அம்முன்னு சொல்லிட்டு பைத்தியமா இன்னும் லவ் பண்ணுவா
அப்ப வரும் அந்த யூட்யூப் மேல அப்படி ஒரு கோபம்
நிறுத்து
உன் மேல அதிகமா அன்பு காட்டுன கோபம் வேற வருமோ என்று கேட்கலாம்
யோவ்… அவ அந்த ரஜினி சார் படத்துல வர ராதிகா மேம்
நடுராத்திரி இட்லி சுட்டுட்டு மாமா சாப்பிடுங்க 3 மணிக்கு சொல்லுவாளே
அந்த லவ்வு டூட்
வீக் எண்டு ஆனா ஹோட்டல்
அதுலயும் அவனுங்க கொண்டு வர்றது எதுவும் நல்லா இல்ல
பட் ஆம்பியன்ஸ் அண்ட் பிரிப்பரேஷன்ல
ஒரு ஃபர்ஸ்ட் வாய் சாப்பிட்டு “யம்மி அம்மு”-ன்னு சொல்லுவா பாருங்க
அப்ப என்னோட மூஞ்சி….
சரி விடுங்க
இப்படி போற ஒரு சைடுல அவளோட உண்மையான அந்த நேர்மையான அன்பு
அதுக்கு நான் டிசர்வ்ட் ஆன்னு தெர்ல
நம்ம வாழ்க்கை எவ்வளவு அழகுன்னா
நம்மள சந்தோஷமா சிரிக்க வச்சு பாக்குற பொண்ண விட வேற என்ன லைஃப்ல முக்கியம்?
மஹாலட்சுமி ரிப்ளை
அம்மு நீ என்ன முழுசா டேமேஜ் பண்ணிட்டே
பரவால்ல நீ என்ன சொன்னாலும் நான் சமைக்கிறதை விடறதா இல்ல
எனக்கும் சச்சினுக்கும் எங்க வாழ்வில் நடந்த மிகப்பெரிய சிறந்த ஒரு விஷயம்னா அது நீ எங்க வாழ்க்கையில வந்ததுதான்
அந்த நிலவையும் தாண்டி நான் உன்ன காதலிக்கிறேன்
பெரிய பெரிய பாராகிராஃப் எழுதி எல்லாம்
என்னோட காதல வெளிபடுத்த எனக்கு தெரியல
ஆனா வாழ்க்கை முழுக்க உன்கூட வாழ்ந்து
என் அன்பை காட்டணும்னு நினைக்கிறேன்
உம்மா
ஹாப்பி அனிவர்சரி மை பெட்டர் ஹாஃப்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.