“சோ என்னோட மாமா, ஆனா பேசவே பயப்படுவேன்” – ரம்யா கிருஷ்ணன்
நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனுக்கு அறிமுகம் தேவை இல்லை. 14 வயதில் “நேரம் புலரும் போல்” என்ற மலையாள படத்தில் நடித்தார். அந்த படம் தாமதமாக வெளியானது. வெள்ள மனசு, படிக்காதவன், பேர் சொல்லும் பிள்ளை ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.
இவரது நடிப்பு கரியருக்கு பிரேக் த்ரூவாக அமைந்தது அம்மன் படம். 1995இல் வெளியான இந்த திரைப்படத்தில் அம்மனாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு ஏகபோக பாராட்டு கிடைத்தது. ரம்யா கிருஷ்ணனை பார்க்கும்போது மக்கள் அம்மனை பார்த்ததாக கையெடுத்து கும்பிட்டு நெகிழ்ந்ததாக அவரே பலமுறை பேட்டியின் போது பகிர்ந்து இருக்கிறார்.
அடுத்து 1999ல் வெளியான படையப்பா என்ற படத்தில் நீலாம்பரியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணன், இன்று வரை வில்லி என்ற கதாபாத்திரத்தை நினைத்தாலே கண்முன் வந்து நின்று விடுவார்.
பின்பு பாகுபலி ராஜமாதாவாகவும் நடிப்பில் மிரட்டி எடுத்தார் ரம்யா கிருஷ்ணன்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியிலே சோ பற்றிய தனது நினைவுகளை மனம் திறந்து பேசி உள்ளார்.
நடிகை ரம்யா கிருஷ்ணனின் பாட்டியும், நடிகரும் அரசியல்வாதியும் துக்ளக் ஆசிரியருமாகவும் இருந்த சோவின் அம்மாவும் உடன் பிறந்த சகோதரிகள்.
சோ எனக்கு மாமா ஆவார். நான் திரைப்படத்தில் நடிக்க வந்த போது அது அவருக்கு பிடிக்கவில்லை. அவர் எனது அம்மாவை அழைத்து சினிமா அவளுக்கு வேண்டாம் என்று கண்டித்தார். ஆனால், நாங்கள் அவரது பேச்சை கேட்கவில்லை. நாங்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். பல அவரை எதிர்கொள்ளும் போதெல்லாம் நான் ஒரு வித பயத்தோடு சென்று பேசுவேன். சினிமாவும் நடிப்பு துறையும் வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் நாங்கள் கேட்கவில்லை. இதற்காக என் அம்மாவுடன் அவர் 8 ஆண்டுகள் பேசவே இல்லை அதன் பின்பு தான் அவர் எங்களை ஏற்றுக்கொண்டார். என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் மனம் திறந்து பேசி உள்ளார்.