குழந்தை வரம் தரும் கர்ப்பிணி புட்லுர் அம்மன்
திருவள்ளுர் மாவட்டம் புட்லுர் – ராமபுரம் ஊருக்கு நடுவே புட்லுர் அம்மன் என்று அழைக்கக்கூடிய பூங்காவனத்தம்மன் திருக்கோயில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு அம்மன் கோவில்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். அதன்படி புட்லுர் திருக்கோயின் சிறப்பே அம்மன் வீற்றிருக்கும் அமைப்பை சொல்லலாம். நிறைமாத கர்ப்பிணியாக, வாய் பிளந்தவாரு, மல்லாந்து படுத்திருப்பது போன்று பக்தர்களுக்கு பூங்காவனத்தம்மன் காட்சி அளிக்கிறாள். இதனாலேயே, குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி புட்லுர் அம்மனை வணங்கினால், குழந்தை பிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. குழந்தை வரம் மட்டுமின்றி அனைத்து விதமான வேண்டுதலுக்காகவும் பூங்காவனத்தம்மனை தேடி நாள்தோறும் மக்கள் வருகின்றனர்.
பூங்காவனத்தம்மன் கோவில் தோற்றிய வரலோறு :
கோவில் அமைப்பு :
திருக்கோவிலில் மூலவராக அங்காளபரமேஸ்வரி அம்மன், விநாயகர், தாண்டவராயன் ஆகியோர் உள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோவிலின் தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது. கோவிலின் எதிரே பக்தர்கள் நீராட பிரம்மாண்ட குளமும், அதற்கு அருகிலேயே பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்ய இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிராத்தனை முறை :
கோயிலில் நீராடி, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம்.
விஷேஷ நாட்கள் :
மஹா சிவராத்திரி, மாசி மாதத்தில் நடைபெறும் மயான கொள்ளை, ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டத்துடன் வெகுவிமர்ச்சையாக கொண்டாடப்படும்.
சக்தியும் சிவனும் ஒரே இடத்தில் சேர்ந்து இருப்பதால் அம்மன் எதிரே நந்தி பகவான் இருப்பது இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு. பிற அம்மன் ஆலயங்களில் மூலவர் எதிரே சிம்ம வாகனம் இருக்கும். ஆனால் இங்கு சக்தியும் சிவனும் சேர்ந்து உள்ளபடியால் எதிரில் நந்தி பகவான் உள்ளது