பிரக்னன்சி டிப்ரஷன் குறைக்க அரசின் சபாஷ் திட்டம்!
“போஸ்ட்பார்டம் பிரக்னன்சி ரியல்” அப்டின்னு சொல்லிட்டு பல இடங்களில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நிஜமாவே கருவுற்ற பெண்கள் திடீரென சந்தோஷம் அடைவது, திடீரென அழுவது என மூட் ஸ்விங்சில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது தாயை மட்டும் இன்றி சேயின் உடல் மற்றும் மனநலத்தையும் வெகுவாக பாதிக்க கூடியது. இதை நன்கு உணர்ந்த கர்நாடக அரசு மருத்துவமனைகளில் மாதந்தோறும் பரிசோதனைக்கு வரும் பெண்களிடம் அவர்களது மனநல பரிசோதனையும் எடுத்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
அவர்களிடம்,
” ஏற்கனவே மன அழுத்தத்துக்கு சிகிச்சை எடுக்கின்றனரா?”
“எப்போதும் அச்சம், பயம், சோகம், அழுகை மன அழுத்தம் போன்றவற்றை உணர்கிறீர்களா?”
என இரு கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒன்றுக்கு ஆம் என பதில் வந்தாலும் அவர்களது Check up File ல் சிவப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கூடுதலாக கண்காணிக்கப்படுகிறது. குறைந்த ரிஸ்க் அல்லது ரிஸ்க்கே இல்லாதவர் file-களுக்கு பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. அத்துடன் அவர்களுக்கு மனதை இலகுவாக்கும் பயிற்சிகளும் ஆலோசனைகளும் மருத்துவர்களால் வழங்கப்பட்டு மன ஆரோக்கியம் பேணப்படுகிறது.
நாட்டிலேயே முதன்முறையாக மாத்ரு சைதன்யா என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் இந்த மனநல ஆரோக்கியம் சார்ந்த பரிசோதனைகள், அடுத்த கட்டமாக தெலுங்கானாவிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .