பிரக்ஞானந்தா 2-ம் இடம். வேண்டுமென்றே முதலில் தோற்றாரா கார்ல்சன்?

அஜர்பைஜானில் உலகக்கோப்பை செஸ் போட்டிக்கான தொடர் நடைபெற்றது. இந்த போட்டியில் உலக தரவரிசை பட்டியலில் 22 ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் இளம் வீரர் பிரக்யானந்தா என்ற 18 வயது சிறுவன் பங்கேற்றார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ரமேஷ் பாபு போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் கொரட்டூர் கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது தாய் நாகலட்சுமி மிகவும் எளிமையானவர். போட்டியில் பங்கேற்கும் மகனுடன் வெளிநாட்டுக்கே சென்றாலும் சாதாரண பூனம் புடவை, எண்ணெய் வைத்து வாரிய தலைமுடி, நெற்றி நிறைய திருநீறு, வெகுளியான புன்சிரிப்பு ஆகியவற்றுடன் வலம் வந்தார். உலக ஊடகங்களின் கவனத்தையும் தனது எளிமையால் பெற்றார்.

பிரக்ஞானந்தா 5 முறை உலக சாம்பியன் ஆன உலகின் நம்பர் 1 தரவரிசையில் உள்ள நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டார்.

முதலாவதாக நடைபெற்ற கிளாசிக் சுற்றில் 2 போட்டிகள் நடந்தன. இரண்டுமே டிரா ஆனது. இருவரும் 1-0, 1-0 என்ற சம புள்ளிகள் பெற்றனர். இதனால் டை ப்ரேக்கர் சுற்று நடத்த வேண்டியதாயிற்று.

இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் தரப்பட்டன. முதல் போட்டியில் பிரகானந்த வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கினார். 41 வது நகர்த்தல் வரை இருவருமே சமநிலையில் தான் இருந்தனர். கடைசி நேர நெருக்கடியில் பிரக்ஞானந்தா ஒரு தவறு செய்ய 47 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இதனால் வெற்றியில் இருந்து சற்றே பின் தங்கினார்.

நெருக்கடி

டை ப்ரேக்கர் சுற்றின் 2வது போட்டியில் கருப்பு நிற காய்களுடன் களம் இறங்கினார் பிரக்ஞானந்தா. வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடினார். ஏனெனில் கால்சன் ஏற்கனவே ஒரு சுற்றில் வெற்றி பெற்றதால் அவர் டிரா செய்தால் கூட வெற்றியை தக்க வைக்கும் அளவு களத்தில் நின்று ஆடினார். மறுபக்கம் கார்ல்சனும் டிரா செய்தால் போதும் என்ற மனநிலையிலேயே களம் இறங்கினார். இதனால் வேறு வழியே இல்லாது 22 ஆவது நகர்த்தலில் போட்டியை டிரா செய்ய இருவரும் சம்மதித்தனர்.

முடிவில் பிரக்ஞானந்தா 1.5 – 2.5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். மிகவும் போராடி 2-ம் இடத்தை பிடித்தார். இதனால் கார்ல்சன் புதிய உலக சாம்பியன் ஆக உருவெடுத்தார். 3வது இடத்திற்கான போட்டியில் அமெரிக்காவின் பேபியானோ காருணா வெற்றி பெற்றார்.

முதலிடம் பிடித்த கார்ல்சனுக்கு வெற்றிக்கான பரிசுத் தொகை இந்திய மதிப்பில் ரூ.91 லட்சம். 2-ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு ரூ.67 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 2 நாட்கள் நடந்த இறுதிப் போட்டியின் போது மேக்னஸ் கார்ல்சனுக்கு ஃபுட் பாய்சன் எனும் உணவு விஷமான கோளாறால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனவே தான் முழு தெம்புடன் இறுதிப் போட்டியை எதிர்கொள்ள அவர் திட்டமிட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. அவர் போட்டியை டிரா செய்யும் நோக்கிலேயே களமிறங்கி விளையாடியதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் உடல்நிலை தேறட்டும் என காத்திருந்த கார்ல்சன் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்றுவிட்டு, 2-வது சுற்றையும் டிரா செய்யும் நோக்கத்தோடு விளையாடியதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE